பகாமாசு நெகிழி இயக்கம்
பகாமாசு நெகிழி இயக்கம் (Bahamas Plastic Movement) என்பது இலாப நோக்கமற்ற ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாகும்.[1] பகாமாசு நாட்டிலுள்ள தெற்கு எலியுதேரா தீவில் இவ்வமைப்பு உள்ளது. நெகிழிகளால் தோன்றும் மாசுபாட்டைக் குறைப்பதில் இவ்வியக்கம் கவனம் செலுத்துகிறது. 2018 ஆம் ஆண்டு கிறிசுடல் அம்புரோசு பகாமாசு நெகிழி இயக்கத்தைத் தொடங்கினார்.[2]நெகிழி பயன்பாடு மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இளைஞர்களைப் பயன்படுத்துவது இந்த அமைப்பின் சிறப்பாகும். இவர்கள் நெகிழி மாசுபாடு கூட்டணியின் செயல் உறுப்பினர்களாக உள்ளனர்.[3]
உருவாக்கம் | 2014 |
---|---|
தலைமையகம் | எலியுதேரா, பகாமாசு |
சேவை பகுதி | பகாமாசு |
Founder | கிறிசுடல் அம்புரோசு |
வலைத்தளம் | bahamasplasticmovement.org |
2017 ஆம் ஆண்டு பகாமாசு நெகிழி இயக்கம் அமெரிக்கப் பாடகர் ஜாக் ஜான்சனின் பாடல் தொகுப்புகளான ’நீங்கள் அதை கட்டுப்படுத்த முடியாது’ மற்றும் ஆல் தி லைட் அபோவ் இட் டூ என்ற இசை காணொலிகளை உருவாக்க உதவியது.
பகாமாசு நாட்டில் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளை பைகளை தடை செய்வதற்காக இவ்வியக்கத்தின் இளைஞர் குழு 2018 ஆம் ஆண்டு பகாமாசின் தலைநகரமான நேசௌ நகரத்திற்கு சென்றது. சுற்றுச்சூழல் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் ரோமால்ட் பெரீராவைச் சந்தித்து நெகிழிப் பைகளை தடை செய்யக் கோரியது.[4] கடற்கரைகளில் நெகிழி மாசுபாடு அதிகரித்தால் 8.5 மில்லியன் டாலர் சுற்றுலா வருவாயை இழக்க நேரிடும் என்று இயக்கம் சுட்டிக் காட்டியது.[5]பெரீராவும் அவரது அமைச்சரவையும் நெகிழிப் பைகளை தடை செய்யும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தனர்.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bahamas Plastic Movement". Bahamas Plastic Movement (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-13.
- ↑ "The Bahamas Has a Plastic Problem, and This Woman Is Out to Fix It" (in en). Coastal Living இம் மூலத்தில் இருந்து 2018-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180814040235/https://www.coastalliving.com/lifestyle/the-environment/kristal-ambrose-bahamas-plastic-movement.
- ↑ "THE COALITION". Plastic Pollution Coalition (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-10.
- ↑ "Bahamas To Ban Plastic Bags >> Scuttlebutt Sailing News" (in en-US). Scuttlebutt Sailing News. 2018-01-22. https://www.sailingscuttlebutt.com/2018/01/22/bahamas-ban-plastic-bags/.
- ↑ 5.0 5.1 "Plastic bag ban takes first step" (in en). http://www.tribune242.com/news/2018/apr/05/plastic-bag-ban-takes-first-step/.
- ↑ "The Bahamas to Ban Single-Use Plastics By 2020 | Caribbean360" (in en-US). Caribbean360. 2018-04-28 இம் மூலத்தில் இருந்து 2018-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180814035939/http://www.caribbean360.com/news/the-bahamas-to-ban-single-use-plastics-by-2020.