டைகண்டர்

(பகுட்டோ சென்கென் டைகண்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டைகண்டர் (爆闘宣言ダイガンダー; பகுட்டோ சென்கென் டைகண்டா) மனிதர்கள் ரோபோக்களை விளையாட்டுப்போட்டிகளில் பயன்படுத்தப்படுவதை அடிப்படையாகக்கொண்ட ஒரு அனிமே தொடராகும். இது டி.வி டோக்யோவில் ஏப்ரல் 2002 முதல் டிசம்பர் 2002 வரை ஒளிபரப்பட்டது. இந்த தொடரில் மொத்த 39 எபிசோடுகள் உள்ளன.

அகிராவும் அவனது ரோபோக்களும்

கதைச்சுருக்கம்

தொகு

வருங்காலத்தில் பேசும் ரோபோக்களைப் பயன்படுத்தி, மனிதர்கள் விளையாட்டுப்போட்டிகளை நிகழ்த்துகின்றனர். இவ்விளையாட்டுப் போட்டிகளில் மனிதர்களின் கட்டுப்பாட்டில் ரோபோக்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்த்து போராடுகின்றன. விலங்குகளைப்போல் இயல்பு நிலையில் இருக்கும் இந்த பேசும் ரோபோக்கள் யுத்தத்தின் போது மனித உருவத்துக்கு ஒத்த உருவத்தில் உருமாறி போராடுகின்றன.

அகிரா அகெபோனோ என்னும் சிறுவன் டைட்டன் பெல்ட் என்னும் மிகப்பெருமை வாய்ந்த ரோபோ போட்டியில் தன்னுடைய ரோபோக்களான பிளையன், ஈகிள்ஆரோ, 'ட்ரைமாக், போன்ரெக்ஸ், டெஸ்பெக்டார், ட்ரைஹார்ன், ரியூகே மற்றும் டைகூ ஆகியவற்றை பயன்படுத்தி, வெல்லுவதே அவனது குறிக்கோள். இந்த ரோபோக்கள் அனைத்தும் அகிராவின் தாத்தா பேராசியர் ஹஜிமே அகெபோனோ உருவாக்கியது. இந்த ஒட்டுமொத்த குழுமத்துக்கு ஹருகா என்ற சிறுமி மேலாண்மையாளராக இருக்கிறாள். குழு அகிரா, இந்த ரோபோக்களுடன் பல ரோபோ சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றில் பெற்றும் வருகின்றனர். இதற்கிடையில், பல நேரங்களில் ஜின்சன் என்ற இன்னொரு ரோபோ அகிராவையின் அவனைச்சார்ந்த ரோபோக்களையும் அழிக்க முற்படுகிறது. பேராசிரியர் மேல்ஸ்ட்ராம் என்பவன் தான், இந்த ரோபோவுக்கு கட்டளையிடுகிறான், மேல்ஸ்ட்ராமும் ஹஜிமேயும் முற்காலத்தில் ஒன்றாக பணி புரிந்தனர். பின்னர் டைகமாரு மற்றும் ரோகமாரு என இரண்டு ரோபோக்களும் அகிரா குழுவை அழிக்க அனுப்பப்படுகின்றன. எனினும் இந்த இரு ரோபோக்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பெரும்பாலும் நகைச்சுவையாகவே முடியும்.

பின்னர், கட்டுக்கடங்காத இன்னொரு ரோபோவான டிராகன் பஸ்டர் மற்றும் இதைச்சார்ந்த ரோபோக்களையும் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை அகிராவுக்கு ஏற்படுகிறது. அகிரா எல்ல தடைகளையும் வெற்றிக்கொண்டு எவ்வாறும் டைட்டன் பெல்ட்டை வெல்கிறான் என்பதே கதை.

கதா பாத்திரங்கள்

தொகு

முக்கியமான கதாபாத்திரங்கள்

தொகு

அகிராவும் அவனது ரோபோக்களும் டைலாந்து என்னும் இடத்தில் வசிக்கின்றனர். தங்களுடைய வாகனத்தேவைக்கு டைஷட்டில் என்னும் விண்ணோடத்தை இயக்குகின்றனர்.

  • அகிரோ அகெபோனோ: அகிரா இக்கதையின் கதாநாயகன். அகிரா குழுவின் அனைத்து ரோபோக்களையும் இவனே கட்டுப்படுத்துகிறான். இவனது குறிக்கோள் டைட்டன் பெல்ட்டை வெல்வது.
  • ஹருகா ஹோஷி: அகிராவின் குழுவையும் அவனது ரோபோக்களையும் கவனித்துக்கொள்ளும் சிறுமி. ரோபோக்களின் பராமரிப்பு மற்றும் அவற்றை செம்மைப்படுத்துதல் போன்ற செயல்களை இவள் செய்கிறாள்.
  • பேராசிரியர் ஹஜிமே அகெபோனோ: ஹஜிமே அகிராவின் தாத்தா ஆவார். அகிரா பயன்படுத்தும் அனைத்து ரோபோக்களையும் உருவாக்கியவர் இவரே ஆவார். எப்போதும் பயணத்தில் இருக்கும் ஒரு நபர்.

அகிராவின் போர் ரோபோக்கள்

தொகு

அகிராவின் குழுவின் கீழ்க்கண்ட ரோபோ பிரவுகள் உள்ளன. டைகண்டர் பிரிவு(ரியூகே, டைகு, டிராகன் ஃபிளேம், டிராகன் ஃபிரீஸ்), விலங்கு பிரிவு(பிளையன், ஈகிள்-ஆரோ, டிரைமாக்) மற்றும் டைனோ பிரிவு(போன் ரெக்ஸ், டெஸ்பெக்டர், ட்ரைஹார்ன்).

  • டைகண்டர்: ஹஜிமேவின் உருவாக்கமான இது, ரியூகே மற்றும் டைகண்டரின் கூட்டுருவமாகும்
    • ரியூகே: ரியூகே அகிராவுடன் என்றும் இருக்கும் ரோபோ. முதலில் அகிராவின் கட்டளைகளை ஏற்க மறுத்தாலும் பின்னர் அவனை ஏற்றுக்கொண்டது.
    • டைகூ : ரியூகேவுடனோ அல்லது பிற ரோபோக்களுடனோ இணைந்து போராடாத வரையில் டைகு தனியாக சண்டையிடுவதில்லை. இதன் விலங்கு உருவம் டிராகன்
    • டிராகன் ஃபிளேம் : ஹஜிமேவும் மேல்ஸ்டிராமும் இணைந்து உருவாக்கிய ரோபோக்களில் ஒன்று. ஆரம்ப காலத்தின் டிராகன் பஸ்டருடன் விண்வெளி நிலையத்தில் இதுவும் டிராகன் ஃபிரீஸும் இருந்தன. பின்னர் டிராகன் பஸ்டர் இவர்கள் இருவரையும் ஒரு சம்பவத்தில் கைவிட்டுவிட்டு தப்பிக்கிறது. அந்நிலையில் இதுவும் டிராகன் ஃபிரீஸும் அகிராவுடன் இணைகின்றன.
    • டிராகன் ஃபிரீஸ்: ஆரம்பகாலத்தில் டிராகன் பஸ்டருடன் இருந்து பிறகு அகிராவுடன் இணைந்த ரோபோ.
  • 'பிளையன் : விலங்கு பிரிவின் தலைவன். இதன் விலங்கு உருவம் சிங்கம்
  • போன்ரெக்ஸ்: போன்ரெக்ஸ் டைனோ பிரிவின் தலைவன். ஆரம்ப காலத்தில் தனித்த இருந்த டைனோ பிரிவு ரோபோக்கள், தாங்கள் வாழ்ந்த பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கு எதிராக போராடின. பின்னர் இந்த பிரிவு கைவிடப்பட்ட பிறகு அகிராவுடன் இணைந்தன. இதன் விலங்கு உருவம் டைரானோசரஸ்
  • மெகாரெக்ஸ்: ஈகிள் ஆரோ, டிரைமாக், டெஸ்பெக்டர் மற்றும் டிராஹார்ன் ஆகிய்வற்றின் கூட்டுருவம்.
    • ஈகிள் ஆரோ: விலங்கு பிரிவைச் சேர்ந்த ரோபோ. அகிராவின் குழுவில் பறக்கும் ரோபோக்களில் ஒன்று. இதன் விலங்கு உருவம் கழுகு
    • டிரைமாக்: விலங்கு பிரிவை சாந்த ரோபோ. எப்போதும் இதற்கு ஈகிஸ் ஆரோக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கும்.
    • டெஸ்பெக்டார்: டைனோ பிரிவை சேர்ந்த ரோபோ. இதன் விலங்கு உருவம் டெரடெண்டான்
    • டிரைஹார்ன்: டைனோ பிரிவை சேர்ந்த ரோபோ. இதன் விலங்கு உருவம் டிரைசெராடாப்ஸ்

கூட்டளிகள்

தொகு
  • ஸ்பிங்கில் ஸ்டார்பர்: ஸ்பிங்கிள் ஸ்டார்பர் ரோபோ சண்டை விளையாட்டுகளின் தலைவர் ஆவார். அனைத்து போட்டிகளும் இவரது கண்காணிப்பிலே நடைபெறும்.
  • ஜின்சன்: மேல்ஸ்டிராமின் கட்டளையில் பல முறையில் ஆரம்பத்தில் அகிராவையும் அவனது ரோபோக்களையும் தாக்கியது. பிறகு டைகண்டரிடம் கௌரவத்தை குறித்தும் மேல்ஸ்டிராமின் உண்மையான நோக்கத்தை குறித்தும், இவன் எவ்வாறும் ரோபோக்களை மரியாதை இல்லாமல் வெறும் பொருளாக கருதுவதைக்குறித்தும் அறிந்தவுடன் அகிராவுக்கு உதவி புரிய ஆரம்பித்தது. ஜின்சனின் விலங்கு உருவம் யூனிகார்ன். மேல்ஸ்டிராம் திருந்தியவுடன் பிறகு மேல்ஸ்டிராம் உடனும் டைகமாரு மற்றும் ரோகமாருவுடனும் மீண்டும் இணைந்தது.

வில்லன்கள்

தொகு
  • பேராசிரியர் மேல்ஸ்டிராம்: இக்கதையின் முக்கிய்மான வில்லன் இவனே ஆவான். பேராசிரியர் ஹஜிமேவின் கூட்டாளியாக இருந்தவன். இவனும் ஹஜிமேவும் தான் இணைந்து டிராகன் பஸ்டர் என்ற ரோபோவை உருவாக்குகின்றனர். எனினும் தன்னை பயன்படுத்தின் ஹஜிமே உலகை கைப்பற்ற போகிறான் என்பதை அறிந்த டிரகன் பஸ்டர், ஹஜிமேவை சுட்டுவிட்டி ஆய்வகத்தையும் அழித்துவிடுகிறது. பல காலத்துக்கு பிறகு வருகிற ஹஜிமே, ஜின்சன், டைகமாரு, ரோகமாரு ஆகிய ரோபோக்களை உருவாக்கி டைகண்டரை அழிக்க நினைக்கிறான். டிராகோ டைகண்டர், இறுதியில் மேல்ஸ்டிராம் மிகப்பெரிய ஆமை ரோபோவை அழித்த பிறகு, இவன் திருந்தி விடுகிறான்
    • டைகமாரு: ஜின்சன் உடன் சேர்ந்து அகிராவின் குழுமத்தை அழிக்க முற்படும் இரு ரோபோக்களில் ஒன்று. இது ரோகமாருவுடன் இணைந்து இன்னொரு புதுவித ரோபோவாக உருமாற இயலும். ரோகமாருவின் விலங்கு உருவம் புலி
    • ரோகமாரு: ஜின்சன் உடன் பணி புரியும் இன்னொரு ரோபோ. ரோகமாருவின் விலங்கு உருவம் ஓநாய்
  • டிராகன் பஸ்டர்: ஹஜிமேயும் மேல்ஸ்டிராமும் இணைந்து உருவாக்கிய ரோபோ,. மேல்ஸ்டிராம் உண்மையான நோக்கம் தெரிந்தவுடன் ஆய்வகத்தை அழித்து விட்டு டிராகன் பஸ்டர் விண்விளி நிலையத்தின் இரு கூட்டாளிகளுடன் தங்குகிறது. இது டைகண்டருடன் இணைந்து டிராகோ டைகண்டர் என்ற மிக சக்திவாய்ந்த கூட்டு ரோபோவாக உருமாறும். டிராகன் பஸ்டரின் ஒரே எண்ணம் மனித குலத்தை அழித்து ரோபோக்களுக்கு ஒரு உலகத்தை உருவாக்குவது இறுதியில், அகிராவுடன் பேசிய பிறகு, மனிதர்களை குறித்த உண்மைகளை அறிகிறது. பிறகு டிராகன் பஸ்டர் ஹஜிமேவின் ஆமை ரோபோவை அழிக்க அகிராவுக்கு உதவி செய்கிறது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகண்டர்&oldid=3368918" இலிருந்து மீள்விக்கப்பட்டது