பகுத்தறிவு (இதழ்)
பகுத்தறிவு இதழ் 1930 களில் சென்னை மாகாணத்தில் பெரியார் ஈ. வே. ராமசாமியால் வெளியிடப்பட்ட தமிழ் பகுத்தறிவு இதழாகும். ராமசாமியின் அண்ணன் ஈ. வே. கிருஷ்ணசாமி இதன் பதிப்பாளர். சமய நம்பிக்கைகள், சாதியம், மூட நம்பிக்கைகள், பெண் ஒடுக்குமுறை ஆகியவற்றை விமர்சித்தும், பல்வேறு சமூக விடயங்களை அராய்ந்தும், அறிவியற் தகவல்களை கொண்டும் இந்த இதழ் வெளிவந்தது. தமிழ்ச் சூழலில் பகுத்தறிவுக் கொள்கை வலுப்பெற இந்த இதழின் பங்களிப்பு முதன்மையானது.
பகுத்தறிவு 1933ல் வாரமொரு முறை வெளியாகும் இதழாகத் தொடங்கியது, 1934ல் இந்திய பொதுவுடமைக் கட்சியுடன் தொடர்புடைய அனைத்து இதழ்களையும் தடை செய்திட பிரித்தானிய அரசு முயன்றது. இதனால் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இதழான குடியரசு மூடப்படும் நிலை உருவானது (பெரியார் இக்காலகட்டத்தில் கம்யூனிச சிந்தனைகள் கொண்டிய இந்திய கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்). குடியரசு மூடப்பட்டதால் அதற்கு பதில் பகுத்தறிவை தினசரியாக மாற்றினார் பெரியார். பின் இந்திய பொதுவுடமைக் கட்சியுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதால் குடியரசு மீண்டும் வெளியாகத் தொடங்கியது. இதனால் பகுத்தறிவு 1935ல் மாதமொரு முறை வெளியாகும் இதழாக மாறியது.
வெளி இணைப்புகள்
தொகு- நாள் ஒரு நூல் திட்டத்தில் பகுத்தறிவு இதழ்கள் பரணிடப்பட்டது 2010-11-21 at the வந்தவழி இயந்திரம்