பகுப்பு பேச்சு:எழுத்துப்பெயர்ப்பு பற்றிய உரையாடல்கள்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

எழுத்துப்பெயர்ப்புக்கு மாற்றாக ஒலிபெயர்ப்பு எனப் பகுப்பை மாற்றலாமா? -- சுந்தர் \பேச்சு 05:57, 10 ஜனவரி 2010 (UTC)

மிகப் பொருத்தமான தலைப்பு. மாற்றுக.பகுப்பு பேச்சு:எழுத்துபெயர்ப்பு உரையாடல்கள் என்பதனையும் கவனத்தில் கொள்க-- உழவன் +உரை.. 02:42, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

எழுத்து பெயர்ப்பு என்பது வேறு. ஒலி பெயர்ப்பு என்பது வேறு.--சிவம் 02:48, 23 செப்டெம்பர் 2012 (UTC)

ஆம் சிவம். அதனாற்றான் மாற்ற வேண்டுமென நினைக்கிறோம். ஒவ்வோர் எழுத்தாகப் பெயர்த்துக் காட்டுவது வேறு. இங்கு நாம் பிறமொழிச் சொற்களுக்கு இணையாகக் கொள்ளக்கூடிய, ஒலிப்பு நெருக்கமுடைய, தமிழ்முறைக்கு உவப்பான ஒலிபெயர்ப்புகளை எவ்வாறு செய்வது என்றுதானே உரையாடுகிறோம்? -- சுந்தர் \பேச்சு 06:30, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply
மேலே தமிழில் எழுத என்ற வசதியில், எழுத்துப்பெயர்ப்பு என உள்ளதே. எப்படி இதனை கையாள்வது?பொருண்மயக்கம் நீக்குக.-- உழவன் +உரை.. 06:43, 26 செப்டெம்பர் 2012 (UTC)Reply
அது சரிதான் தகவலுழவன். அங்கே ஒவ்வோர் எழுத்தாக நாம் தட்டும்போது அதற்கு இணையானதென்று முன்னமே குறித்த விதிகளின்படி தமிழ் எழுத்துக்கள் கோர்க்கப்படுகின்றன. அதை எழுத்துப்பெயர்ப்பு எனலாம். அங்கே உள்ளீட்டுக்கும் வெளியீட்டுக்கும் ஒரு நேரடியான தொடர்பு உண்டு.(அத்தொடர்பு எழுத்தளவிலும், வெகுசில இடங்களில் ஓரிரு எழுத்துக்கள் இணைந்த அளவிலும் இருக்கிறது.) மாறாக, மாற்றுமொழிப் பெயர்களை ஒலிபெயர்க்கும்போது உள்ளீட்டில் உள்ள ஒவ்வோர் எழுத்துக்கும் இணையாகத் தமிழில் எழுத்து ஒன்றைக் கோர்க்க வேண்டுமென்பதில்லை, சில இடங்களில் விட்டும், சில இடங்களில் மெய்யொலித் தொடர்கள் வரும்போது தமிழ்முறைக்கு ஏற்ப உயிரொலிகளைச் சேர்த்தும் எழுதுவதால் இதை நாம் ஒலிபெயர்ப்பு என்பது முறையே. -- சுந்தர் \பேச்சு 07:06, 26 செப்டெம்பர் 2012 (UTC)Reply
பகுப்புகளுக்குப் பெயர் மாற்றுவது தானியங்கி மூலம் செய்தால் நல்லது.--Kanags \உரையாடுக 08:40, 26 செப்டெம்பர் 2012 (UTC)Reply
அப்படியே செய்யலாம் சிறீதரன். -- சுந்தர் \பேச்சு 06:47, 28 செப்டெம்பர் 2012 (UTC)Reply
பொருண் மயக்கம் நீக்கியமைக்கு நன்றி. சுந்தர்! இரண்டு பகுப்புகளையும் ஒருங்கிணைக்கவேண்டும். அதற்கு ஒலிப்பெயர்ப்புப் பற்றிய உரையாடல்கள் என்ற ஒரே பெயர் பொருந்தும் தானே? தானியங்கி பற்றி, எங்கு ஐயங்களைக் கேட்க வேண்டும்.? -- உழவன் +உரை.. 03:02, 30 செப்டெம்பர் 2012 (UTC)Reply
தகவலுழவன், 'ஒலிப்பெயர்ப்புப் பற்றிய உரையாடல்கள் நன்றாக உள்ளது. புணர்ச்சியில் இந்த இடத்தில் ப் வருமா எனத் தெரியவில்லை. உறுதி செய்து கொள்ளுங்கள். -- சுந்தர் \பேச்சு 08:14, 1 அக்டோபர் 2012 (UTC)Reply
இவ்வாறான தானியங்கிகளை நற்கீரன், சண்முகம் போன்றோர் இயக்குகின்றனர்.--Kanags \உரையாடுக 03:13, 30 செப்டெம்பர் 2012 (UTC)Reply
நன்றி சிறீதரன். -- சுந்தர் \பேச்சு 08:14, 1 அக்டோபர் 2012 (UTC)Reply
//வன்றொடர்க் குற்றியலுகரவீற்றின் (வினைத்தொகை போன்ற விதிவிலக்குகள் உண்டு.) முன் வரும் வல்லினம் மிகும். ஆகவே, ஒலிபெயர்ப்புப் பற்றிய உரையாடல்கள் என்பதே சரியானது.// என்பதனை, பயனர் பேச்சு:மதனாஹரன்#புணர்ச்சி இலக்கண விதி நடந்த உரையாடலில் அறிந்தேன்.-- உழவன் +உரை.. 13:28, 9 அக்டோபர் 2012 (UTC)Reply
Return to "எழுத்துப்பெயர்ப்பு பற்றிய உரையாடல்கள்" page.