பகுப்பு பேச்சு:புத்தியற்றுநர்

புத்தியற்றுநர் - இதன் பொருள் என்ன? தமிழ்ச் சொல்லா?--Kanags 21:41, 13 பெப்ரவரி 2007 (UTC)

பகுப்பு:கண்டுபிடிப்பாளர்கள் ஏற்கனவே உள்ளது. புத்தியற்றுனர் அதனையே குறிக்கிறது என நினைக்கிறேன். ஒரு பகுப்பின் பெயராகப் பாவிக்கும் போது ஓரளவு பழக்கமான சொல்லையே பயன்படுத்துவது பொருத்தமாகப் படுகிறது. நன்றி. --கோபி 21:47, 13 பெப்ரவரி 2007 (UTC)
கண்டுபிடித்தல் என்பது உள்ள ஒரு பொருளைக் கண்டு பிடித்தல் (discovery) ஆகும். புதிதாக ஒன்றை இயற்றுதல் அல்லது உருவாக்குதல் (invent) புத்தியற்றுதல் ஆகும். புத்தாக்கம் செய்தோர் புதியன உருவாக்கியோர், புதியன இயற்றுவோர் புத்தியற்றுநர் ஆவர். எனவே inventor = புத்தியற்றுநர். நல்ல தமிழ்ச்சொல்தான் !

--செல்வா 22:07, 13 பெப்ரவரி 2007 (UTC)

ஏற்கனவே புத்தியற்றுநர் என்னும் சொல்லை உள் எரி பொறி என்னும் கட்டுரையில் இட்டேன்.--செல்வா 22:13, 13 பெப்ரவரி 2007 (UTC)

புத்தி+அற்றுநர் என்று பிரித்து வாசித்ததால் அந்த சந்தேகம் வந்தது. புத்தி என்ற வட சொல்லடியாகக் கருத இடமுண்டு. அதுவும் புத்திசாலிகளைப் பற்றிய பகுப்பென்றதால் அப்படி ஒரு எண்ணமேற்பட்டது. கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் காணவேண்டும். நன்றி.--Kanags 23:49, 13 பெப்ரவரி 2007 (UTC)
discovery என்பதைக் கண்டறிதல் என்றும் invent என்பதைக் கண்டுபிடித்தல் என்றும் வித்தியாசப்படுத்தும் பயன்பாட்டை அவதானித்துள்ளேன். இது பரவலாக உள்ளதோ தெரியவில்லை. --கோபி 23:54, 13 பெப்ரவரி 2007 (UTC)
கனகு, புத்தி+அற்றுநர் = புத்திற்றுநர் என மாறும் ஆனால் அற்றுநர் என்பதன் பொருள் என்ன?. பொதுவாக புத்தாக்கம், புத்தாண்டு, புத்துணர்வு, புத்துணர்ச்சி, புத்தூக்கம், புத்தெழுச்சி, புத்தறிவு, புத்திணக்கம், புத்தேற்றம் (= புதிய + ஏற்றம்) முதலிய நூற்றுக்கணக்கான சொற்களை புது + உயிரெழுத்தில் தொடங்கும் ஒரு சொல் என்னும் முறையில் ஆக்கலாம். கோபி, கண்டறிதல், கண்டுபிடித்தல் இரண்டும் discovery என்பதைத்தான் உணர்த்தும் என எண்ணுகிறேன். பொதுவாக தமிழில் எழுதும் பொழுது discover-invent ஆகிய இரு சொற்களையும் அவ்வளவாக வேறுபடுத்தி எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.--செல்வா 00:11, 14 பெப்ரவரி 2007 (UTC)
இந்த Invention, Discovery இரண்டுடன் மூன்றாவதாக Innovation என்ற சொல்லுக்கும் வேறுபாடு அறிதல் வேண்டும். Invention பற்றிய ஆங்கில விக்கிபீடியா கட்டுரையில் பின்வரும் விளக்கம் உள்ளது:
An invention differs from an innovation. While an invention is merely theoretical (even though the legal protection of a patent may have been sought), an innovation is an invention that has been put into practice.
புத்தியற்றுனர் என்பது நல்ல சொல்தான் Invention என்பதற்கு இச்சொல்லோடு இசைவான சொல் உருவாக்குவது கடினம் என்று நினைக்கிறேன். Invention என்பதற்கு புத்தாக்கம் என்பதாயின், புத்தியற்றுனர் என்பதற்குப் பதிலாகப் புத்தாக்குனர் என்பதைப் பயன்படுத்தினால் என்ன? Mayooranathan 19:25, 13 மார்ச் 2007 (UTC)
தாராளமாக புத்தாக்குனர் எனச் சொல்லலாம். --செல்வா 19:55, 13 மார்ச் 2007 (UTC)
ஆங்கில விக்கியில் உள்ள கருத்து சரியானதல்ல. invention என்பது 'merely theortetical' அல்ல. Innovation என்பது உரிமம் ஏதும் பெறா புதுப்பயனாக்கமாகவோ, புது திசையில் வளர்ந்ததாகவோ இருக்கலாம் ஆனால் அவை புதிய அறிவுப் படைப்பு என்று கூறுவது கடினம். சில புதிய ஆக்கங்கள் வளர்ச்சிகளுக்கு இரண்டுமே பொருந்துமாறும் இருக்கும். Innovation என்பது புதுப்பயனாக்கம், புதுவளர்ச்சி, புதுமை ஊட்டிய வளர்ச்சி அல்லது பயனாக்கம் ஆகும். --செல்வா 20:05, 13 மார்ச் 2007 (UTC)
இங்கு innovation என்பதற்கும் வரையறை தந்தால் நன்று. பொதுவாக அனேக ஆக்கங்கள் innovation என்ற வகைக்குள்தான் சேரும். --Natkeeran 22:05, 13 மார்ச் 2007 (UTC)
உங்கள் விளக்கங்களுக்கு நன்றி செல்வா, இங்கே எழுதப்படும் கட்டுரைகளில் பயன்படுத்துவதற்காக இக் கருத்துருக்களை வரையறை செய்து பொருத்தமான சொற்களைத் தீர்மானித்துக் கொள்வது நல்லது. Mayooranathan 02:27, 14 மார்ச் 2007 (UTC)

Start a discussion about பகுப்பு:புத்தியற்றுநர்

Start a discussion
Return to "புத்தியற்றுநர்" page.