பகுப்பு பேச்சு:புனைவுத் தீவுகள்

fiction என்பதற்கு பொருத்தமானச் சொல்லாக, புனைவு அல்லவா? கற்பனை என்பதற்கு பொருத்தமான ஆங்கிலச் சொல்லாக, imagination என்றே கருதுகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 03:34, 16 சூன் 2014 (UTC)Reply

en:phantom island--Kanags \உரையாடுக 09:22, 16 சூன் 2014 (UTC)Reply
விக்கித்தரவில் இப்பகுப்புக்கு இணைப்புக் கொடுத்து போது, w:en:Category:Phantom islands என்ற பகுப்பினைக் கண்டேன். அது w:en:Category:Fictional islands என்பதன் கீழ் பகுப்பிடப்பட்டிருந்தது. அதனால் fiction என்ற சொல் இங்கு பொருத்தமாகப் படுவதாகக் கருதுகிறேன். நீங்கள் கொடுத்துள்ள கட்டுரை இணைப்பு வரலாற்றில் புனையப்பட்ட நிலவியல் பகுதி. எல்லா வரலாற்றுப் புனைவுகளும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் திரித்து கூறப்படுபவை அல்லவா? . அதனால் இதனை கற்பனை என புரிந்து கொள்ள, என் மனம் ஒப்பவில்லை. ஏனெனில், புனைவுகளில் கற்பனை, தவறான நம்பிக்கை, மதிப்பீடு, எண்ணம் இருக்கலாம்.(எ. கா.) உலகம் தட்டையானது என்று முந்தைய வரலாற்றில் புனைவாகக்(தவறான மதிப்பீடு, எண்ணம்) கூறினர். கற்பனையை வைத்து மட்டும் அல்ல என்றே கருதுகிறேன். எனவே, Phantom என்பதற்குரிய மொழியாக்கம், கற்பனை என்பது பொருத்தமாக இல்லை. --≈ உழவன் ( கூறுக ) 10:20, 16 சூன் 2014 (UTC)Reply
நிலமில்லாத் தீவு எனலாமா? ஏனெனில், நிலமே இல்லாமல் கற்பனையாகவோ, புனைவாகவோ இருப்பதாக க் கூறப்பட்ட தீவு அல்லவா!--≈ உழவன் ( கூறுக ) 02:28, 27 சூன் 2014 (UTC)Reply
@Kanags:,@தகவலுழவன்: புனைவுத் தீவுகள் என்பதே பொருத்தமாக இருக்கும். அண்மையில் நான் சில பகுப்புகளை விக்கித்தரவில் இணைத்த பொழுது, கற்பனை என்பது த.வியில் Fantacy, Fiction, imagination ஆகிய மூன்றுக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிந்தது. எனவே தலைப்பை மாற்றுவது நல்லது எனக் கருதுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:21, 2 சூன் 2020 (UTC)Reply
புனைவுத் தீவுகள் என்றே மாற்றி விடுகிறேன். அதுவே பொருத்தமாக இருக்கும்.--Kanags \உரையாடுக 06:44, 2 சூன் 2020 (UTC)Reply
Return to "புனைவுத் தீவுகள்" page.