பகுப்பு பேச்சு:மியான்மரின் நகராட்சிகள்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Umashankar81
பயனர்:Umashankar81, ஆங்கில விக்கியில் இப்பகுப்பு "Townships of Myanmar" என்றுள்ளது. "Townships" என்றால் "நகரியங்கள்" என விக்சனரி மொழிபெயர்க்கிறது. "நகராட்சி" என்பது "Municipality" ஐத் தானே குறிக்கும். உங்கள் கருத்தினைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:27, 25 திசம்பர் 2017 (UTC)
- Booradleyp1 (பேச்சு), விக்சனரியில் தேடும்போது Township என்பதன் ஒலிப்புப் பொருளாக நகராட்சி மற்றும் நகரியம் இரண்டுமே வருகிறது. மேலும் நீங்கள் கூறியது போல விக்சனரியில் நகராட்சி என்பதன் ஆங்கிலப் பெயர்களாக Municipality,Township இரண்டையும் குறிக்கிறது. இது ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளது. நனறி !--உமாசங்கர் (பேச்சு) 15:29, 25 திசம்பர் 2017 (UTC)
- Booradleyp1 (பேச்சு), இதற்கு தீர்வு நாம் ஒலிப்புப் பொருளை கருதாமல் அதன் பயன்பாட்டின் பொருளில் உள்ளது. எ.க அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் "County" என்ற உட்பிரிவு இந்தியாவில் "District" தமிழில் "மாவட்டம்" என்பது அந்த உட்பிரிவின் பயன்பாடு. அதுபோல மியான்மரின் "Township" என்ற உட்பிரிவு இந்தியாவில் "Municipality" அமைப்பிற்கு இணையானது தமிழில் "நகராட்சி" சரியாக அந்த உட்பிரிவை குறிக்கும் "நகரியம்" என்று அழைப்பதில்லை. ஆகவே "நகராட்சி" என்பதே சரியான் தேர்வாகும். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 01:52, 26 திசம்பர் 2017 (UTC)
நன்றி,பயனர்:Umashankar81. இப்பகுப்பினை ஆங்கில விக்கியில் Category:Townships of Myanmar இல் இணைப்பதற்கு முன் தெளிவுபடுத்திக் கொள்ளவதற்காகக் கேட்டேன். --Booradleyp1 (பேச்சு) 03:35, 26 திசம்பர் 2017 (UTC)
- Township ஐ நகராட்சிகள் எனலாம். Municipality - மாநகராட்சி?--Kanags (பேச்சு) 03:10, 26 திசம்பர் 2017 (UTC)
- தமிழ்நாட்டில் Municipality - நகராட்சி, corporation-மாநகராட்சி என வழங்கப்படுகிறது.--Booradleyp1 (பேச்சு) 03:35, 26 திசம்பர் 2017 (UTC)
- Kanags (பேச்சு), இங்கு தமிழ்நாட்டில் corporation ஐ தான் மாநகராட்சி என்றழைக்கிறோம். மேலும் Township ஐ நகராட்சி (ஒருமை) என்றழைப்பதே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 03:43, 26 திசம்பர் 2017 (UTC)