பகுப்பு பேச்சு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்

ஏறத்தாழ 60% கூகுள் மொழியாக்கம் பொருத்தமாக இல்லை. இந்நிலையில், இப்பகுப்பில் உள்ள பக்கங்களில், கட்டுரையின் மேற்கோள் வழு இருப்பதாகத் தானியக்கமாகக் காட்டப்படுகின்றன. உரிய ஆங்கில கட்டுரையின் மேற்கோள்கள் அங்கு இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, நாம் இவ்வழு வரும் மேற்கோள்களை நீக்கிவிடலாம் என்று பரிந்துரைக்கிறேன். சில இந்திய மொழிகளில் மேற்கோள் வழுக்களே இல்லாதனவாக உள்ளன. நமது தமிழ் விக்கிப்பீடியாவும் மேற்கோள் வழுவற்று இருக்கவே தவறான மொழிபெயர்க்களுடன் இருக்கும் மேற்கோள்களை நீக்கி விடலாமென்று எண்ணுகிறேன். பிறரின் எண்ணம் அறிய ஆவல்.--உழவன் (உரை) 09:39, 13 மார்ச் 2017 (UTC)

வழுவுள்ள மேற்கோள்களை நீக்குவது நல்லதல்ல. அவற்றைத் திருத்த முயற்சி செய்ய வேண்டும். //பிழை காட்டு: Invalid <ref> tag; name "IMF_GDP" defined multiple times with different content// போன்ற வழுக்களைக் களைவது அவ்வளவு பெரிய வேலையில்லை.--Kanags \உரையாடுக 09:52, 13 மார்ச் 2017 (UTC)
பகுப்பு பேச்சு:மேற்கோள் வழு-Defined multiple times என்ற பக்கத்தில் ஒரு வழுவை களைவது பற்றியும், அப்பொழுது கவனிக்கப்பட வேண்டியன குறித்தும், சிறு விளக்கக் குறிப்பும், ஒரு எடுத்துக்காட்டும் தருக. அதனை மாதிரியாகக் கொண்டு, ஏதேனும் நிரலாக்க உதவி கிடைக்குமா என பார்க்கிறேன். --உழவன் (உரை) 10:14, 13 மார்ச் 2017 (UTC)

தானியக்க முறையில் கட்டுரைகள் தொகு

தானியக்க முறையில் இப்பகுப்பில் அடங்கும் கூகுள் கட்டுரைகளை இணைத்துள்ளேன். மொத்தம் 161 கட்டுரைகளில் மேற்கோள் வழுக்கள் இன்று இருக்கின்றன. மேற்கோள் வழு 4-6 இருக்கும்போல் தெரிகிறது. அவற்றைப் பிரித்த பிறகு, வழுக்கள் நீக்கப்படும்--உழவன் (உரை) 10:28, 13 மார்ச் 2017 (UTC)

Return to "மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்" page.