பகுப்பு பேச்சு:வரலாறு

மக்களின் வரலாறு பதியப்படவேண்டும் தொகு

"இது வரையிலான வரலாறு என்பது ஆள்வோரின் வரலாறாக (அரசுகளின் வரலாறாக) ஓர் ஒற்றைச் சொல்லாடலாக, தட்டையானதோர் ஒற்றைத் தடத்தில் தொடர்ந்து செல்லும் ஒன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வெகு சனங்களின் பார்வைகள், மொழியாடல்கள், அனுபவங்கள், குரல்கள், நினைவுக் குறிப்புகள், அறிவுத் தேடல்கள், வரலாறுகள் கவனம் பெறாதும் பார்க்கபெறாதும் கேக்கப்படாதுமே போயுள்ளன." (மகரந்தனின் சனங்களும் வரலாறும் பதிப்புரையிலிருந்து) --Natkeeran 01:02, 5 ஜூலை 2006 (UTC)


"தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பிரமிப்பூட்டும் பல்லவர் மற்றும் பிற்காலச் சோழர் கால வரலாற்று மாயையிலிருந்து சராசரித் தமிழன் இன்னும் மீளவில்லை. கல்கியும் சாண்டில்யனும் விக்ரமனும் உருவாக்கிய வெகுசன வரலாற்று நாவல்களின் தாக்கம் நம் வரலாற்றுணர்வை மிகவும் குறுக்கிவிட்டது. சாதிய மேலாண்மையையும் அதன் அடிப்0படையில் உருவாக்கப்பட்ட சுரண்டல்களும் 'ஆசியக் கொடுங்கோன்மை' என்றழைக்கப்படும் உடன்கட்டை, குழந்தை மணம், நரபலி, தீண்டாமை, தேவதாசி முறை போன்ற சமூகக் கொடுமைகளும் தமிழ்ச் சமூகத்தில் இடம் பெற்றிருந்தன. இன்றும் கூட இவற்றுள் சில நம் சமூக வாழ்வில் பழைய வடிவிலோ புதிய வடிவிலோ இடம்பெற்றுள்ளன. இக்கொடுமைகளை மக்கள் எதிர் கொண்டமையும் அவற்றிலிருந்து விடுபட அவர்கள் நடத்திய போராட்டங்களையும் நமது வரலாற்று நூலகள் முறையாக பதிவு செய்யவில்லை." (ஆ. சிவசுப்பிரமணியன், வாய்மொழி வழக்காறுகளும் வரலாறும் கட்டுரை, சனங்களும் வரலாறும் என்ற நூலில் பக் 22) --Natkeeran 15:09, 5 ஜூலை 2006 (UTC)

வரலாறு தொடர்புடைய சுட்டிகள் தொகு

சங்க காலத் தமிழ் அரசர்களைப் பற்றி உள்ள காலக் குறிப்புகள் தொகு

சங்க காலத் தமிழ் அரசர்களைப் பற்றி உள்ள காலக் குறிப்புகள், கல்வெட்டுக்களில் இருந்தும், அதற்குத் துணையாக வழி வழியாக வரும் சங்க இலக்கியப் பாடல்களும் ஆகும். புகழ்பெற்ற ஐராவதம் மகாதேவன் அவர்களும், தமிழ்நாடு தொல்லியல் அறிஞர்களும் நிறுவிய காலங்களே இவை. எனினும், மிகவும் தெளிவாக எந்த கட்டுரையில், எங்கு யார் கணித்தார்கள் என்னும் விளக்கங்களும் சேர்த்தல் கட்டுரைக்கு வலு கூட்டும். முதுகுடுமி பற்றி வரும் பாடல்களும், செப்பேட்டுக் குறிப்புகளும் கட்டுரையில் தந்துள்ளேன். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அரசர்கள் பலரைப்பற்றிய செய்திகள் உண்மை என்பது ஐராவதம் மகாதேவன் அவர்கள் கல்வெட்டுக் கண்டுபிடிப்புகளின் படி நிறுவியதாகும். கீழ்க்காணும் இடங்களில் மேலும் உறுதி பயக்கும் குறிப்புகள் உள்ளன:

--செல்வா 14:47, 9 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் ஆங்கிலம் வரலாற்று சொற்கள் பட்டியல் தொகு

தமிழ் ஆங்கிலம் வரலாற்று சொற்கள் பட்டியல் - அரசாட்சிகள்
தமிழ் ஆங்கிலம்
கலிங்கர் Orissa rulers, en:Kalinga (India)
குப்தர் Gupta Empire
களப்பிரர் ?? ???
தமிழ் ஆங்கிலம் வரலாற்று சொற்கள் பட்டியல் - இடம்கள்
தமிழ் ஆங்கிலம்
சாவகம், ஜாவா Java
சுமத்திரா Sumatra
காடாரம் Kedah
தமிழ் ஆங்கிலம் வரலாற்று சொற்கள் பட்டியல் - வெளி நாட்டார்
தமிழ் ஆங்கிலம்
போலாந்தர், போர்த்துக்கீசியர் Portugese
ஒல்லாந்தர் en:Netherland
துருக்கியர் Turks

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:வரலாறு&oldid=1631728" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வரலாறு" page.