பகுப்பு பேச்சு:விடுதலைப் புலிகளின் போராளிகள்
இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்
தொகுஎம்மவரின் சான்றுகள் பல ஏற்கெனவே அழிக்கப்பட்டு விட்டன. விக்கியில் தேடித் தேடி உருவாக்கிய பல கட்டுரைகளை சான்றுகளே இல்லை என்று சொல்லி அழித்து விட நினைப்பது வருத்தத்தையே தருகிறது. இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இருந்த பல சான்றுகள் இன்று இல்லை. இங்கும் அழிக்கப்பட்டால் என்றைக்குமே இல்லாது போய்விடுவார்கள். --Chandravathanaa (பேச்சு) 09:47, 27 மார்ச் 2015 (UTC)
- சந்திரவதனா, குறிப்பிடத்தக்க போராளிகள் என்பதற்கான வரையறையைப் பரிந்துரைக்க முடியுமா? எடுத்துக்காட்டுக்கு, குறிப்பிட்ட இராணுவ அமைப்புநிலைத் தகுதி (rank) உடையவர், ஊடகங்களில் பெயர் வரப்பெற்றவர்கள். இப்படி ஏதேனும் சில வரையறைகள் தேவை. இவ்வாறான பொது வரையறை ஒன்றுக்கு விக்கிச் சமூகம் ஆதரவு தருமானால், இவர்களைக் குறிப்பிடத்தக்கவர்கள் என்று கருதி விக்கிப்பீடியாவில் தனிக்கட்டுரை இடலாம். குறைந்தது, இவர்களைப் பற்றிய விவரங்களை ஒரு பக்கத்தில் தொகுத்து வைக்கலாம். இதனை விடுதலைப் புலிகள் என்ற நோக்கில் மட்டும் பார்க்காமல், பொதுவாக எந்த ஒரு போராட்ட இயக்கத்திலும் யாரைக் குறிப்பிடத்தக்கவர்களாக கருதலாம் என்ற நோக்கில் பார்க்க வேண்டுகிறேன். ஏன் எனில், இங்கு எடுக்கப்படும் முடிவு அடிப்படையில் மற்ற இயக்கங்களுக்கும் குறிப்பிடத்தக்கமை வரையறுக்கப்படலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:38, 27 மார்ச் 2015 (UTC)
நன்றி -இரவி. இங்கு விக்கிபீடியாவில் பதியப்பட்ட விடுதலைப்புலிகளின் போராளிகளில் பெரும்பாலோனோர் குறிப்பிடத்தக்கவர்களே.
எல்லோரது ஆதாரங்களையும் உடனடியாகத் திரட்ட முடியவில்லை. இணையங்களில் இருந்த பல தகவல்கள் கூட பாதுகாப்புக் கருதி அழிக்கப்பட்டு விட்டன.
உதாரணத்துக்கு மொறிஸ் தியாகராசா பரதராசன் மிகவும் பிரபலமாக பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்தவர். நான்காவது வல்லரசின் இராணுவத்தையே பருத்தித்துறையில் திக்குமுக்காட வைத்தவர். அவர் இருக்கும் போதும் சரி, இறந்த பின்னும் சரி மிகவும் பேசப்பட்டவர். ஹாட்லிகல்லூரியை நோக்கிச் செல்லும் வீதியின் கல்லூரி வீதி என்ற பெயரையே அவரது இறப்புக்குப் பின் மொறிஸ் வீதியென மாற்றியிருந்தார்கள். மொறிஸைப்பற்றிய பதிவுகள் ஒரு கட்டத்தில் ஏராளம் இருந்தன. தற்சமயம் அவை எடுக்கக் கூடிய இடங்களில் இல்லை.
மற்றவர்களுக்கும் குறிப்பிடத்தக்க பல தகைமைகள் உள்ளன. எல்லாவற்றையும் சான்றுகளுடன் நிரூபிக்க முயற்சிக்கிறேன்.--Chandravathanaa (பேச்சு) 12:03, 30 மார்ச் 2015 (UTC)