பக்கா ரௌடி

(பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி) 1937 ஆம் ஆண்டு, யூலை 14 இல் வெளிவந்த 14664 அடி, தமிழ்த் திரைப்படமாகும். மோகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில், "ராமனிக்லால்" மற்றும் "மோகன்லால்" என இவர்கள் இயக்கத்தில் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் பி. எஸ். சீனிவாசராவ், எஸ். பாட்சா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பக்கா ரௌடி
தயாரிப்புராமனிக்லால்
மோகன் பிக்சர்ஸ்
மோகன்லால்
நடிப்புபி. எஸ். சீனிவாச ராவ்
எஸ். பாட்சா
எஸ். எஸ். கொக்கோ
ஆர். பி. லட்சுமிதேவி
கமலா
வெளியீடுசூலை 14, 1937
நீளம்14664 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

முதலில் "தஞ்சாவூர் ரெளடி" என்ற பெயரில் இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது, ஆனால் தஞ்சை வாழ் மக்கள் படத்தின் தலைப்பை மிக வன்மையாகக் கண்டித்து எதிர்த்தனர். இதனால் "பக்கா ரெளடி" என்று பெயர் மாற்றம் பெற்று இப்படம் வெளியாயிற்று.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்)- 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கா_ரௌடி&oldid=4099963" இலிருந்து மீள்விக்கப்பட்டது