ஆர். பி. லட்சுமிதேவி

ஆர். பி. லட்சுமிதேவி (R. B. Lakshmi Devi, பெப்ரவரி 2, 1917[1] - ) ஒரு தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகையாவார். சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமான ஸ்ரீநிவாச கல்யாணம் திரைப்படத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆர். பி. லட்சுமிதேவி

வாழ்க்கைக் குறிப்புதொகு

வட சென்னையில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் இவர்.[2] மௌனப் படக் காலத்தில் இயக்குநர் சி. வி. ராமனால் திரையுலகிற்கு அறிமுகமானார்.[1] அவரது சகோதரர் ஏ. நாராயணன் தயாரித்த ஸ்ரீநிவாச கல்யாணம் (1934) பேசும் படத்தில் முதன் முதலில் நடித்தார்.[1] பின்னர் "ஸ்டன்ட்" நடிகையாக பம்பாயில் தயாரிக்கப்பட்ட பல தமிழ்ப் படங்களில் தோன்றியிருக்கிறார்.[1] 1950களின் தொடக்க காலத்திலேயே சென்னை லாயிட்ஸ் சாலை 70-ஆம் இலக்க வீட்டில் குடியேறினார். தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் பலரும் குடியிருந்த லாயிட்ஸ் சாலையில் முதலில் குடியேறியவர் இவரே.[2] ஆனால் இவர் பின்னர் லாயிட்ஸ் சாலையின் அருகே இருந்த கோபாலபுரம் கணபதி குடியேற்றத்திற்கு மாறிவிட்டார்.[2] லட்சுமிதேவி மெரினாவில் குதிரை சவாரி செய்யும் பழக்கம் உடையவர்.

நடித்த சில திரைப்படங்கள்தொகு

பின்னணிப் பாடகிதொகு

1940 ஆம் ஆண்டில் வெளியான ஜயக்கொடி படத்தில் கே. டி. ருக்மணிக்கு பின்னணி பாடியுள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "நட்சத்திரம் பிறந்த நாள்". குண்டூசி: பக். 34. பெப்ரவரி 1951. 
  2. 2.0 2.1 2.2 வாமனன் (9 அக்டோபர் 2017). "செல்லுலாய்ட் ‘தேவதைகள்’ வலம் வந்த சென்னை மாநகரின் லாயிட்ஸ் சாலை!". தினமலர். Archived from the original on 2020-07-04. https://archive.today/20200704072726/http://www.dinamalarnellai.com/web/news/36366/. பார்த்த நாள்: 4 ஜூலை 2020. 

வெளி இணைப்புகள்தொகு

யூடியூபில் இதுவகையான் - ஆர். பி. லட்சுமிதேவி ஜயக்கொடி படத்தில் கே. நடராஜனுடன் பாடிய பாடல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பி._லட்சுமிதேவி&oldid=3424777" இருந்து மீள்விக்கப்பட்டது