பக்குடுக்கை நன்கணியார்

பக்குடுக்கை நன்கணியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகையில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு 194ஆம் பாடலாக உள்ளது[1][2].

புலவர் பெயர் விளக்கம்

தொகு

இவர் தன் பாடலில் பக்கத்தில் நிகழ்வனவற்றை உடுத்திக்கொண்டு அவற்றை நல்ல கண் கொண்டு பார்க்குமாறு நம்மை ஆற்றுப்படுத்துவதால் இவரது பெயர் பக்கு+உடுக்கை+நல்+க(ண்)ணியார் என அமைக்கப்பட்டுள்ளது. இது பாடற்பொருளால் அமைந்த பெயர். இது உலகியலைக் கூறும் பெருங்காஞ்சித் துறைப் பாடலாக உள்ளது. இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணி யார் என்பது இவரது இயற்பெயர் எனவும், கணி என்பதற்கு சோதிட வல்லவன் எனவும் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்[3].

வாழ்ந்த காலம்

தொகு

புத்தர், மகாவீரர் ஆகியோரின் சமகாலத்தவராகவும், அவர்களைவிட மூத்தவராகவும் இருந்துள்ளார். பக்குடுக்கையார் ஏழு பொருள்கள் (நிலம், நீர், வளி, உயிர், இன்பம், துன்பம், தீ) குறித்து விளக்கி உள்ளார். இந்திய மெய்யியல் வரலாற்றில் தனிப் பெரும் இடம் பெற்றவர் பக்குடுக்கை நன்கணியார்[4].

உலகியலும் உண்மை விளக்கமும்

தொகு

இவர் எழுதியப் புறப்பாடலில் உள்ள கருத்து: ஓர் இல்லத்தில் இறந்ததற்கு இரங்கும் நெய்தல் பறை ஒலிக்கிறது. மற்றோர் இல்லத்தில் மகிழ்ச்சித் ததும்பும் முழவொலி கேட்கிறது.

ஓர் இல்லத்தில் புணர்ந்தோர் பூமாலை அணிந்துள்ளனர். அவர்களது கண்கள் பூத்து மகிழ்கின்றன. மற்றோர் இல்லத்தில் தலைவன் பிரிந்து சென்றுள்ளதால் தலைவியின் கண்ணில் பனித்தாரை ஒழுகுகிறது.

இப்படி உலகைப் படைத்துவிட்டான் ஒரு பண்பில்லாதவன்.

இப்படிப்பட்ட உலகில் வாழ்வது துன்பந்தான்.

இதனை நன்கு உணர்ந்தவர் உலகில் நிகழ்பவை இனியன என்னும் கண்கொண்டே பார்க்க வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "பக்குடுக்கை நன்கணியார்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
  2. "உலக வாழ்வும் இலக்கிய வடிவமும்: முத்திரைப் பதிவுகள் -24". தினமணி. 18 சனவரி 2015. http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/01/18/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81/article2624276.ece?service=print. பார்த்த நாள்: 29 மே 2016. 
  3. தமிழண்ணல். "தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு". விடுதலை. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "தொல்காப்பியத்தில் தமிழ் இலக்கியத்தின் வேர்கள்: க. நெடுஞ்செழியன்". தினமணி. 22 சூன் 2014. http://www.dinamani.com/tamilnadu/2014/06/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/article2294166.ece. பார்த்த நாள்: 29 மே 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்குடுக்கை_நன்கணியார்&oldid=3219249" இலிருந்து மீள்விக்கப்பட்டது