பக்தி நாதம்

பக்தி நாதம் (இதழ்)
இதழாசிரியர் கார்த்திகை மைந்தன்
துறை ஆன்மீகம்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒருமுறை
மொழி தமிழ்
முதல் இதழ் ஏப்ரல் 2011
இறுதி இதழ் தொடர்கிறது
இதழ்கள் தொகை தொடர்கிறது
வெளியீட்டு நிறுவனம் மாதவம் பதிப்பகம்
நாடு தமிழ்நாடு
வலைப்பக்கம் www.bakthinadham.com

பக்தி நாதம் என்பது தமிழகத்திலிருந்து தமிழில் வெளிவரும் ஒரு ஆன்மீக மாத இதழ் ஆகும். இது அச்சு வடிவத்திலும் இணையத்தில் மின் இதழாகவும் படிக்கக் கிடைக்கின்றது[சான்று தேவை]. பக்தி நாதத்தின் ஆசிரியராக கவிஞர். கார்த்திகை மைந்தன் செயல்படுகிறார்.

உள்ளடக்கம்

தொகு

பக்தி நாதம் இதழில் ஆன்மீகச் செய்திகள், ஜோதிடம், இந்து மதப் பண்பாடுகள் மற்றும் கலாச்சாரக் கட்டுரைகள் முதலானவை வெளிவருகிறது. இந்த ஆன்மீக இதழ், தகவல்களை அளிக்கும் இதழாக இருப்பதோடு கற்றும் தருகிறது. சுயமாக ஜாதகம் கணிக்க, பஞ்சாங்கம் பார்க்க கற்றுக் கொள்ள உதவும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆன்மீக தலங்களின் வரலாற்றுப் பின்னணி மற்றும் அறிவியல் பின்புலங்களை அறிந்து கொள்ள உதவும் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

வெளியிணைப்புகள்

தொகு

பக்திநாதம்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_நாதம்&oldid=3219262" இலிருந்து மீள்விக்கப்பட்டது