பங்கர்வாடி (திரைப்படம்)
மராத்தி மொழி திரைப்படம்
பங்கர்வாடி (Bangarwadi, மராத்தி: बनगरवाडी) மராத்தி மொழித் திரைப்படம் ஆகும். வ்யங்கடேஷ் மல்கோவ்ன்கர் 1955-ல் பங்கர்வாடி எனும் பெயரில் எழுதிய புதினத்தை அமோல் பாலேகர் திரைப்படமாக எடுத்துள்ளார். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் கதை 1939 ஆம் ஆண்டில் நடப்பதாகக் காட்டப்படும்.
பங்கர்வாடி | |
---|---|
இயக்கம் | அமோல் பலேகர் |
தயாரிப்பு | இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் தூர்தர்ஷன் |
கதை | வியங்கடேஷ் மட்குல்கர் (Vyankatesh Madgulkar) (திரைக்கதை, வசனம்) |
இசை | வான்ராஜ் பாட்டியா (vanraj Bhatia) |
நடிப்பு | சந்திரகாந்த் குல்கர்னி சந்திரகாந்த் மாண்டரே ஆதிஸ்ரீ அட்ரே நந்து மாதவ் சுனில் ரானடே உபேந்தரா லிமயே |
ஒளிப்பதிவு | டெபு தியோதார் |
படத்தொகுப்பு | வாமன் போஸ்லே (Waman Bhosale) |
வெளியீடு | 1995 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மராத்தி |
கதை
தொகுமஹாராஜாவின் உத்தரவின் படி கிராமம் ஒன்றில் பள்ளிக்கூடம் தொடங்க வரும் இளைஞன் ஒருவன் சந்திக்கும் அனுபவமே இத்திரைப்படத்தின் கதை ஆகும்.
விருதுகள்
தொகு- 1996 ஆம் ஆண்டு மகாராட்டிர அரசின் 5 விருதுகள்
- 1995 ஆம் ஆண்டின் சிறந்த மராத்தி மொழித் திரைப்படம்
திரைப்பட விழாக்களில்
தொகுஇத்திரைப்படம் பல்வேறு நாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அவை,
- கார்லோவி வாரி (Karlovy Vary) சர்வதேசத் திரைப்பட விழா- 1996
- பர்மிங்ஹாம் (Birmingham ) சர்வதேசத் திரைப்பட விழா- 1996
- லண்டன் (London) திரைப்பட விழா- 1966
- 15 வது ஈரானிய (FAJR) சர்வதேசத் திரைப்பட விழா- 1996
- கெய்ரோ (Cairo) சர்வதேசத் திரைப்பட விழா- 1996
- கொலம்பியா (Bagota) சர்வதேசத் திரைப்பட விழா- 1996
- சரஜீவோ (Sarajevo) திரைப்பட விழா- 1996