இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம்

இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் (ஆங்கிலம்:National Film Development Corporation of India (NFDC).) இது ஒரு அகில இந்திய அரசு சார்ந்த இந்தியத் திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் ஆகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] இது இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்ட நிறுவனமாகும்.

இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம்
National Film Development Corporation of India
நிறுவுகை1975 ஆம் ஆண்டு
தலைமையகம்மும்பை, இந்தியா
சேவை வழங்கும் பகுதி இந்தியா
தொழில்துறைகேளிக்கை
இணையத்தளம்அதிகாரப்பூர்வமான இணையத்தளம்

வரலாறு

தொகு

இந்த நிறுவனம் 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2] கடந்த பல்லாண்டுகளில் இந்தியத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் இந்தியத் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்காக பல்வகை சேவைகளை வழங்கி வருகிறது; குறிப்பாக 1970களில் இந்தியாவில் நிலவிய மாறுபட்ட புத்தலை திரைப்படங்களுக்கு ஊக்குவிக்கும் வண்ணம் நிதி உதவி மற்றும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.[3] இந்த நிறுவனமும் இதற்கு முன்னர் இருந்த திரைப்பட நிதிக் கழகமும் 300 திரைப்படங்களுக்கும் மேலாக நிதி உதவி வழங்கியும் தயாரித்தும் உள்ளன. இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படங்கள் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளன. அண்மையில் காசுமீரியில் எடுக்கப்பட்ட மூன்றாவதுத் திரைப்படமான Bub ('தந்தை') இந்நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாகும்.

இந்தியத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தற்போதையத் தலைவராக ரமேஷ் சிப்பி உள்ளார்; இதற்கு முன்னதாக ஓம் பூரி இருந்தார்.

1983இல் எட்டு அகாதமி விருதுகள் பெற்ற காந்தியின் தயாரிப்பில் இந்தியத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகமும் முக்கியப் பங்காற்றி உள்ளது.

தயாரித்த திரைப்படங்கள்

தொகு

இந்தியாவின் பல்வேறு மொழி, கலாசார அடிப்படையில் இது வரையில் இந்த நிறுவனம் முன்னூறுக்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில மிகப் பெரிய விவாதங்களையும் தேசிய விருதுகளையும் பெற்றிருக்கின்றன.[4]

அவற்றில் சில அட்டவணையில்:-

ஆண்டு திரைப்படம் இயக்குநர் மொழி
1997 கருவேலம்பூக்கள் பூமணி தமிழ் |
1990 மறுபக்கம் கே. எஸ். சேதுமாதவன் தமிழ்
2006 சாசனம் மகேந்திரன் தமிழ்
2000 அம்பேத்கர் ஜெபால் பாட்டேல் ஆங்கிலம்
2001 பாப் (தந்தை) ஜோதி சரூப் காஷ்மீரி
2008 பையோஸ்கோப் கே. எம். மதுசுதனன் மலையாளம்
2003 பரிணாமம் பி. வேணு மலையாளம் [5]

ஆதாரங்கள்

தொகு
  1. "NFDC: இந்தியத் திரைப்படத் துறை மற்றும் தயாரிப்பு விவரங்கள்". Nfdcindia.com. பார்க்கப்பட்ட நாள் 2010-08-02.
  2. "NFDC: Filming in India, Shooting in India, Indian Movies, Indian Films & Cinema, Bollywood". Nfdcindia.com. பார்க்கப்பட்ட நாள் 2010-08-02.
  3. "NFDC creates buzz in Cannes film market". Indian Express. 22 May 2008 இம் மூலத்தில் இருந்து 11 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121011161332/http://www.expressindia.com/latest-news/NFDC-creates-buzz-in-Cannes-film-market/313166/. 
  4. "இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் திரைப்படங்கள்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 22 - 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு] தினமணி -சினிமா எக்ஸ்பிரஸ்
  5. http://www.nfdcindia.com/cinemasofindia/home-video-05.htm

வெளியிணைப்பு

தொகு