டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் (திரைப்படம்)

(அம்பேத்கர் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முனைவர். பாபாசாகிப் அம்பேத்கர் (ஆங்கிலம்:Dr. Babasaheb Ambedkar) இது டிசம்பர் 15, 2000 ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படம் ஆகும்.[1] இத் திரைப்படம் இந்திய நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்ட, அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் ஆவணத் திரைப்படமாகும். இயக்குனர் ஜப்பார் பட்டேல் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி அம்பேத்கராக நடித்துள்ளார். இத் திரைப்படத்தை இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரித்துள்ளது.[2]

டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர்
Dr. Babasaheb Ambedkar
இயக்கம்ஜப்பார் பட்டேல்
தயாரிப்புதிர்லோக் மாலிக்
கதைதயா பவார்
அருண் சாது
சோனி டாராபோரெவாலா
இசைஅமர் ஹால்டிபுர்
நடிப்புமம்முட்டி
சோனாலி குல்கர்னி
மோகன் கோகலே
மிருணாள் குல்கர்னி
ஒளிப்பதிவுஅசோக் மேத்தா
படத்தொகுப்புவிஜய் கொச்சிகர்
வெளியீடுடிசம்பர் 15 2000
ஓட்டம்180 மீட்டர்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு 8.95 கோடி

கதைச் சுருக்கம்

தொகு

வெளியீடு

தொகு

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் 1998 ஆம் ஆண்டு தயாரன போதிலும், இது டிசம்பர் 15 , 2000 ஆம் ஆண்டு அன்று வணிகரீதியாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. பின்பு இப்படம் ஒன்பது இந்திய மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதர்க்கு தமிழக அரசு சார்பாக பத்து லட்சம் நிதியுதவியை படத்தின் தயாரிப்பாளரிடம் வழங்கப்பட்டது.[3] ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் தமிழகத்தில் பத்து ஆண்டுக்குப்பின் டிசம்பர் 3 , 2010 அன்று தான் தமிழில் வெளிவந்தது.[4]

ஆக்கச் செலவுகள்

தொகு

இத் திரைப்படத்திற்கு “சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்” மற்றும் மகாராஷ்டிரா அரசு இணைந்து நிதி உதவியுடன், இந்திய அரசுக்குச் சொந்தமான தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம் தயாரித்து நிர்வகிக்கப்பட்டது. இப்படத்திற்கு மொத்தம் 8.95 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.[5]

நடிகர்கள்

தொகு

விருதுகள்

தொகு

இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டின் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது-:[6]

ஆதாரங்கள்

தொகு
  1. "என்எப்டிசியில் திரைப்படம் வெளியிட்டத் தேதி". ஐ.எம்.டி.பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2012.
  2. "வாராது வந்த திரைப்படம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச்சு 2024.
  3. "அம்பேத்கர் படத்துக்கு தமிழக அரசு ரூ 10 லட்சம் நிதி! என்எப்டிசி தயாரிப்பு". ஒன் இந்தியா. 3 திசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் "அம்பேத்கர்'". தினமணி. 3 சனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2012.
  5. "Ambedkar film cost shoots up to Rs 8.95 cr". 8 ஏப்பிரல் 1999. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. ""Release film on Ambedkar"". தி இந்து. 10 ஏப்பிரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்பிரல் 2023.

வெளியிணைப்பு

தொகு