பங்காரு உஷா ராணி
இந்திய அரசியல்வாதி
பங்காரு உஷா ராணி (Bangaru Usha Rani) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 16 மே 2009 அன்று பிரஜா ராச்யத்தின் தலைவர் கொனிடெல்லா சிரஞ்சீவியை தோற்கடித்து பாலகொல்லு சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
பங்காரு உஷா ராணி Bangaru Usha Rani | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | சத்யநாராயண மூர்த்து |
பின்னவர் | நிம்மாலா ராமா நாயுடு |
தொகுதி | பாலகொல்லு சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
அரசியல் வாழ்க்கை
தொகுபாலகொல்லு நகராட்சித் தலைவராக இருந்தார். இவர் 2009-2014 காலத்திற்கு இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். உஷா ராணி ஆர்ய வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்ள்
தொகு- ↑ "More women make it to Assembly, Lok Sabha - ANDHRA PRADESH". The Hindu. 2009-05-23. Archived from the original on 2009-05-30. பார்க்கப்பட்ட நாள் 2015-08-28.