பங்குச் சந்தையில் பணம் பண்ண (நூல்)

பங்குச் சந்தையில் பணம் பண்ண என்பது பங்குகளை தொழில்நுட்ப முறையில் அணுக தமிழில் எழுதப்பட்ட நூல்.

பங்குச் சந்தையில் பணம் பண்ண
நூல் பெயர்:பங்குச் சந்தையில் பணம் பண்ண
ஆசிரியர்(கள்):ஜி.ரமேஷ்
வகை:வர்த்தகம்
துறை:டெக்னிக்கல் அனாலிஸ்
இடம்:265/2A,பஜனை கோயில் தெரு
தேவசகாயம் நகர்
கன்னடபாளையம்,
மேற்குத் தாம்பரம்
சென்னை-45
மொழி:தமிழ்
பக்கங்கள்:116
பதிப்பு:2011
ஆக்க அனுமதி:குறிப்பிடப்படவில்லை

நூலாசிரியர்

தொகு

பங்குச் சந்தை முதலீட்டில் அடிப்படை மற்றும் தொழில்நுட்ப ஆய்வு பற்றிய இந்த நூலை ஜி. ரமேஷ் எழுதியுள்ளார். இவர் பங்குச் சந்தை நிபுணர். பங்குச் சந்தை ஆய்வு துறையில் அனுபவம் பெற்றவர். மெடாசிஸ் டெக் என்கிற பங்குச் சந்தை ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர். தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகளில் பங்குச் சந்தை குறித்த விரிவான பேட்டிகள் மற்றும் கட்டுரைகளை அளித்துள்ளார்.

அணிந்துரை

தொகு

தமிழ்நாட்டில் வெளிவரும் பல வணிக நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பங்குச் சந்தை குறித்து அதிகமான கட்டுரைகளை எழுதி வரும் எஸ்.லெட்சுமணராமன் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

பொருளடக்கம்

தொகு

பங்குச் சந்தையில் பணம் பண்ண எனும் இந்நூலில்,

  • அடிப்படை ஆய்வின் அவசியம்..!
  • விலைகள் சொல்லும் பாடங்கள்..!
  • ஆதரவு நிலை
  • உயர்தடுப்பு நிலை
  • ஆதரவு மற்றும் உயர்தடுப்பு நிலைகளின் வலிமை
  • இழப்பு தடுப்பு
  • தொழில்நுட்ப ஆய்வு ஏன்?
  • சந்தையின் அல்லது பங்கின் போக்கு நிலை
  • டிரெண்ட் லைன் வகைகள்
  • டிரெண்ட் லைன் கற்பிக்கும் பாடங்கள்..!
  • டிரெண்ட் லைன் ஆங்கிள்
  • வரைபட வகைகள்
  • சார்ட் அமைப்புகள் (பேட்டர்ன்)
  • வால்யூம் அமைப்புகள்
  • இடைவெளி வர்த்தக உத்திகள்
  • இடைவெளி வர்த்தகத்தில் (கேப் டிரேடிங்) வகைகள்..!
  • ஹெட் அண்ட் சோல்டர் அமைப்பு
  • கேண்டில் ஸ்டிக் சார்ட் அமைப்பு
  • கேண்டில் ஸ்டிக் சார்ட் வகைகள்..!
  • கப் வித் கேண்டில் அமைப்பு
  • டபுள் டாப் அமைப்பு
  • டபுள் பாட்டம் அமைப்பு
  • டிரிபிள் டாப், டிரிபிள் பாட்டம் அமைப்பு
  • ஃபிளாக் மற்றும் பென்னட் அமைப்பு
  • மூவிங் ஆவரேஜ் & இண்டிகேட்டர்கள்
  • டைவர்ஜன்சஸ் இன்டிகேட்டர்கள்
  • பாலிங்கர் பான்ட்கள்

எனும் 27 பகுதிகளில் பங்குகளை டெக்னிக்கல் முறையில் அணுகுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு