பசிபிக் ஆக்குவாரியம்
பசிபிக் ஆக்குவாரியம் (Aquarium of the Pacific) என்பது அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தில், லாங் பீச் என்ற நகரில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகம் ஆகும். [1] இது ரெயின்போ துறைமுகத்தில் 5 ஏக்கர் நிலத்தில் உள்ளது. 500 வகையான 11000 விலங்குகள் இந்தக் காடசியகத்தில் உள்ளன. ஆண்டுதோறும் 15 இலட்சம் மக்கள் இந்தக் காட்சியகத்தைப் பார்த்துச் செல்கிறார்கள். 900 ஊழியர்கள் இங்கு பணி செய்கிறார்கள். பொது மக்கள் நன்மைக்காக, வணிக நோக்கமில்லாமல் இந்தக் காட்சியகம் செயல்படுகிறது. விலங்குகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சங்கத்தில் இக் காட்சியகம் உறுப்பாண்மை கொண்டுள்ளது.