பசுமைக் கட்டிடம்

(பசுமைக் கட்டடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பசுமைக் கட்டிடம் (Green Building) என்பது தற்காலத்தில் கட்டிடத் துறையில் மிகவும் பழக்கமான ஒரு கருத்துரு ஆகும். இதுவே தாங்கும் தன்மை கொண்ட (Sustainable) கட்டிடம் எனவும், உயர் தொழிற்பாட்டுக் கட்டிடங்கள் (High Performance Building) எனவும் குறிப்பிடப் படுகின்றன. இது சூழல் பாதுகாப்பு, மக்கள் நல்வாழ்வு என்பவற்றோடு தொடர்புடையது.[1][2][3]

பசுமைக் கட்டிடம் என்பதன் பொருள்

தொகு

இதற்குப் பலரும் பலவிதமான வரைவிலக்கணங்களைக் கொடுத்து வருகிறார்கள். ஐக்கிய அமெரிக்க பசுமைக் கட்டிடச் செயற்குழு (USGBC)பசுமைக் கட்டிடங்கள் குறித்துப் பின்வருமாறு கூறுகிறது.

சூழல் மீதும், கட்டிடங்களில் குடியிருப்பவர்கள் மீதும் ஏற்படக்கூடிய எதிர் மறையான தாக்கங்களைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் அல்லது முற்றாகவே இல்லாமல் செய்யும் நோக்குடன், பசுமைக் கட்டிட வடிவமைப்பு, கட்டுமானச் செயல்பாடுகள் என்பன தாங்கும் தன்மை கொண்ட (Sustainable) கட்டிடத்துக்குரிய இடத் (site) திட்டமிடல், நீர்ப் பாதுகாப்பு, நீர்ச் செயற்றிறன் (water efficiency), சக்திச் செயற்றிறன் (energy efficiency), பொருள்களினதும் வளங்களினதும் காப்பு (conservation) மற்றும் உள்ளகச் சூழற் பண்பு (Indoor Environmental Quality) ஆகியவை தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன.

நல்லியல்புகள்

தொகு

சுற்றுசுழல் நன்மைகள்

தொகு

சுற்றுசூழலுக்கு கட்டிங்களால் ஏற்படும் தீமைகளை குறைக்கும்

அளவுக்கு அதிகமான இயற்கை வளங்களின் பயன்பாட்டை குறைக்க கூடியது

இவை சிறந்த செயற்பாட்டுத் திறன் கொண்டவை.

பொருளாதார நன்மைகள்

தொகு

கட்டிடங்களின் நீடித்த உழைப்பு, மற்றும் தேவையாயின் குடியிருப்பவர்களின் தேவைக்கேற்ப மாற்றம் செய்யக் கூடிய தன்மை என்பவற்றையும் பெற முடியும்.

சமூக நன்மைகள்

தொகு

சக்தி மற்றும் நீர்ப் பயன்பாடுகளைப் பொறுத்தவரை அதிகரித்த செயற்றிறன் கிடைக்கிறது.

கட்டிடங்களுக்குள்ளே சுத்தமான காற்று, வசதியான வெப்பச் சூழல், பொருத்தமான ஒளியமைப்பு என்பன தொடர்பிலும் கூடுதலான செயற்திறனைப் பெறலாம்.

சிறப்பான கழிவகற்றல் முகாமைத்துவத்தைக்(waste management) கொண்டனவாக இருக்கும்.

உயர் தொழிற்படு திறனை அடைவதற்குக் கடைப்பிடிக்கப்படும் சில வழிமுறைகள்

தொகு

கட்டிடத்தின் இடத்தை தேர்வு செய்தல் மிகவும் போக்குவரத்திர்க்கும் மற்ற வசதிகளுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும்

மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்

கட்டிடத்தின் வடிவமைப்பானது கட்டிடம் அமையக்கூடிய இடத்தின் வெப்பநிலை ,காற்றோட்டம் ,காலநிலை ஆகியவற்றை பொருத்து அமைக்க வேண்டும் .

கழிவு நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கு புதுதொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்

சூரிய மின்சக்தியை பயன்படுத்த வேண்டும்

பசுமை கட்டிடங்களின் மதிப்பீடு

தொகு

GRIHA (கீரின் ரேட்டிங்கு ஃபார் இன்டகிரேடட் ஹபிடேட் அசஸ்மென்ட்) என்பது ஒரு மதிபீட்டு முறையாகும். இதனை TERI என்னும் நிறுவனம், இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்துடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. அது பசுமை கட்டிங்களுக்கான வடிவ மதிப்பீட்டு திட்டம் ஆகும். இது நாட்டில் உள்ள அனைத்து பருவநிலைகளிலும் உள்ள கட்டிடங்களுக்கும் பொருந்தக்கூடிய திட்டமாகும்.

எடுத்துக்காட்டுகள்

தொகு

தமிழகத்தில் உள்ள பசுமை கட்டிடங்கள்

தொகு

சென்னையில் உள்ள தமிழக சட்டமன்றக் கட்டிடம்,

சென்னையில் உள்ள ஒலிம்பியா கட்டிடம்

உலக அளவில் உள்ள பசுமை கட்டிடங்கள்

தொகு

கிளிண்டன் பிரசிடென்சி டவர் ,அமெரிக்கா

கவுன்சில் ஹவுஸ் 2 ,ஆஸ்திரேலியா

மார்க்கோபோலா டவர் ,ஜெர்மனி

ஆதம் ஜோசெப்லூயி சென்டர் ,அமெரிக்கா

சாண்டோஸ் பேலஸ் ,ஆஸ்திரேலியா

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Basic Information". Green Building. US EPA. Archived from the original on 2021-03-28. பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
  2. Yan Ji and Stellios Plainiotis (2006): Design for Sustainability. Beijing: China Architecture and Building Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-112-08390-7
  3. "A Review of Building Construction Cost Research: Current Status, Gaps and Green Buildings". Green Building & Construction Economics 2 (1): 1–17. 22 April 2021. doi:10.37256/gbce.212021. பன்னாட்டுத் தர தொடர் எண்:2737-5021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுமைக்_கட்டிடம்&oldid=4100303" இலிருந்து மீள்விக்கப்பட்டது