பசும்பிடி
பசும்பிடி | |
---|---|
பசும்பிடி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | Clusiaceae
|
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | Garcinia
|
இனம்: | G. xanthochymous
|
இருசொற் பெயரீடு | |
Garcinia xanthochymous Hook.f. ex T.Anderson | |
வேறு பெயர்கள் | |
|
பசும்பிடி (Garcinia xanthochymus) என்னும் மலரின் இளமுகிழ் சுவைக்காகவும், நறுமணத்துக்காகவும் வாயில் போட்டு மெல்லப்படும் என்பதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
- குன்றத்துக் கோதையர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று பசும்பிடி.[1]
- இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் போரில் ஈடுபட்டிருந்த காலத்தில் அவனது கோப்பெருந்தேவி கொல்லிமலை அரண்மனையில் கொடை வழங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் பெருவாய் மலரையும், பசும்பிடியையும் மென்று மகிழ்ந்துகொண்டிருந்தாள்.[2]
- திருப்பரங்குன்றத்தில் பூத்திருந்த மலர்கள் ஒரு பாடலில் கூறப்பட்டுள்ளன.[3]
- ஆம்பல் (நெகிழ்த்த வாழ் ஆம்பல்)
- இலவம் (பகைமலர் இலவம்) (பகை = செந்நிறம்)
- எருவை நறுந்தோடு
- காந்தள் (கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்)
- கோங்கம் (பருவம் இல் கோங்கம்)
- தோன்றி (உருவம் மிகு தோன்றி)
- நறவம் (ஊழ் இணர் நறவம்)
- பசும்பிடி இளமுகிழ்
- பல்லவம் (நனிநுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச் சினை போழ்ப் பல்லவம் தீஞ்சுனை உதிர்ப்ப)
- வேங்கை (எரியிணர் வேங்கை)
இவற்றில் ஒன்று பசும்பிடி.