பசு மரம்
பசு மரம் (Brosimum) என்பது மொரேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களின் ஒரு பேரினமாகும். இது அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டுள்ளது.[1]
வகைப்பாடு
தொகுமோரேசியீ குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர்புரோசிமம் கெட்டாக்டோடென்ரான் என்பதாகும். இது பால் மரம் எனவும் அறியப்படுகிறது.
மரத்தின் அமைப்பு
தொகுமரத்தின் அடர்த்தியான வண்ண சிவப்பு நிறம் அலங்கார மரவேலைக்கு பயன்படுத்தப்படுகிறது.[1] பெரிய பசுமையான மரம் 70-80 அடி உயரமும் 6-8 அடி விட்டமும் கொண்டுள்ளது. இதனுடைய இலைகள் பாம்பின் தோல் போன்று தடிமனாக இருக்கும். இம்மரத்தில் வரும் பூக்கள் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதனுடைய உருண்டை மலர் கொத்தில் பல ஆண் பூக்களும், இதன் நடுவில் ஒரு பென் பூவும் உள்ளது. மரத்தின் கனியையுயும், பூவையும் சாப்பிடலாம். மாயா நாகரிகத்தில் இதன் கொட்டைகள் உண்ணக்கூடிய ஒன்றாக இருந்தது.[2] மேலும் இது தென் அமெரிக்க ஷாமன் குழுக்களால் ஒரு மனநோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.[3]
மரத்தின் தண்டுப்பகுதியில் அளவுக்கு அதிகமான பால் உள்ளது. இது பசுவின் பாலைப்போன்றே உள்ளது. இதை அமெரிக்காவின் கிராமப் புறத்தில் உணவாக சேர்த்துக் கொள்கிறார்கள். இலங்கையில் இப்பாலை பசுவின் பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறார்கள்.
மேற்கோள்
தொகு- ↑ Baker (2004)
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
- ↑ "Identification of 5-hydroxy-tryptamine (bufotenine) in takini (Brosimumacutifolium Huber subsp. acutifolium C.C. Berg, Moraceae), a shamanic potion used in the Guiana Plateau". Journal of Ethnopharmacology 106 (2): 198–202. June 2006. doi:10.1016/j.jep.2005.12.022. பப்மெட்:16455218.
- Baker, Mark (2004): Wood for Woodturners. Guild of Master Craftsmen Publications, Sussex. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86108-324-6