பசையம் (குளுட்டன்)
பசையம் (gluten )இது இலத்தீன் சொல்லான 'glue' என்பதிலிருந்து தோன்றியது) என்பது புரதங்களின் தொகுப்பாகும், புரோலமின் மற்றும் குளுடின் என அழக்கப்படுகின்றன [1] , ஸ்டார்ச் உடன் சேர்த்து தானியங்களில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும். இது கோதுமை, பார்லி , கம்பு மற்றும் ஓட்ஸ் [2] போன்றவற்றிலும் உள்ளது. ஒட்டும் தன்மை கொண்டது மாவில் நெகிழ்வுத் தன்மை கொடுக்கிறது. மெல்லக்கூடிய தன்மை கிடைக்கிறது.[3][4][5] இந்த சிறப்பு பண்புகள் மற்றும் அதன் குறைந்த விலை ஆகியவற்றால் குளுட்டன் மிகவும் பரவலாக உணவுத் துறை மற்றும் உணவு அல்லாத பயன்பாடுகளுக்கு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கோதுமையில் உள்ள புரோலமின்கள் கோதுமைப் புரதம் என்று அழைக்கப்படுகின்றன; பார்லி - ஹார்டீன்கள் ; கம்பு -செகாலின் ; மற்றும் ஓட்ஸ் - அவெனின்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்வகையான புரதங்களின் தொகுப்புகள் பசையம் என்று குறிப்பிடப்படுகின்றன.[2] கோதுமை குளுட்டன், குளுட்டனின் என அழைக்கப்படுகின்றது.[6] உண்மையான பசையம் இந்த நான்கு தானியங்களில் மட்டுமே உள்ளது.[1] ( மக்காச்சோளம் மற்றும் அரிசியில் உள்ள சேமிப்பு புரதங்கள் சில நேரங்களில் குளுட்டன் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் அவை உண்மையான குளுட்டனில் இருந்து வேறுபடுகின்றன).[1]
பசையம் (குளுட்டன்) அழற்சி, நோய் எதிர்ப்பாற்றல், நோய் எதிர்பாற்றல் எதிர்வினைகளை சிலருக்கு உண்டாக்குகிறது. குடல் நோய்கள், தோல் நோய்கள்,நரம்பியல் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.[7][8][9] அவர்களுக்கு சிகிச்சை பசையம் இல்லாத உணவாகும்.[7][8]
குளுட்டன் மூலக்கூறுகள் டைசல்ஃபைட் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே பிசுக்குத் தன்மைக்குக் காரணம்.
நோய்கள்
தொகு- கோலியாக் நோய் என்ற குளுட்டன் ஒவ்வாமை,
- கோலியாக் அல்லாத பசையம் உணர்திறன் (NCGS)
- கோதுமை ஒவ்வாமை
- பசைய தள்ளாட்டம் மற்றும் தோலழற்சி
- ஹெர்பெட்டிஃபார்மிஸ் போன்றவை அடங்கும்.[7]
- கோதுமை அலர்ஜி
- அதிகரித்த குடல் ஊடுருவுதல்
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Food and Drug Administration (January 2007). "Food Labeling ; Gluten-Free Labeling of Foods" (PDF). Archived from the original on 2007-01-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ 2.0 2.1 Biesiekierski JR. What is gluten?.
- ↑ Shewry. The structure and properties of gluten: An elastic protein from wheat grain.
- ↑ Cereal-based gluten-free food: how to reconcile nutritional and technological properties of wheat proteins with safety for celiac disease patients. Jan 29, 2014.
- ↑ 5.0 5.1 Wheat-gluten uses and industry needs. February 2006.
- ↑ Payne (2012-12-06). A Genetic Approach to Plant Biochemistry.
- ↑ 7.0 7.1 7.2 "The Oslo definitions for coeliac disease and related terms". Gut 62 (1): 43–52. January 2013. doi:10.1136/gutjnl-2011-301346. பப்மெட்:22345659.
- ↑ 8.0 8.1 "Treatment of Neurological Manifestations of Gluten Sensitivity and Coeliac Disease.". Curr Treat Options Neurol 21 (3): 10. doi:10.1007/s11940-019-0552-7. பப்மெட்:30806821.
- ↑ "Cognitive Impairment and Celiac Disease: Is Transcranial Magnetic Stimulation a Trait d'Union between Gut and Brain?". Int J Mol Sci 19 (8). July 2018. doi:10.3390/ijms19082243. பப்மெட்:30065211.
- ↑ Fasano A (Jan 2011). "Zonulin and its regulation of intestinal barrier function: the biological door to inflammation, autoimmunity, and cancer". Physiol. Rev. 91 (1): 151–75. doi:10.1152/physrev.00003.2008. பப்மெட்:21248165. https://archive.org/details/sim_physiological-reviews_2011-01_91_1/page/151.
- ↑ Suzuki (2013-02-01). "Regulation of intestinal epithelial permeability by tight junctions". Cellular and Molecular Life Sciences 70 (4): 631–659. doi:10.1007/s00018-012-1070-x. பப்மெட்:22782113.