பச்சாகூட்டெக்

11வதி இன்கா பேரரசன்

பச்சாகுட்டி இன்கா யுபான்கி (Pachacuti Inca Yupanqui) பச்சாகூட்டெக் என்றும் அழைக்கப்படும் இவர் குசுக்கோ இராச்சியத்தின் ஒன்பதாவது மன்னனாக இருந்தார். இவர் குசுக்கோவை இன்கா பேரரசாக மாற்றினார். பெரும்பாலான தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இப்போது மச்சு பிச்சுவின் புகழ்பெற்ற இன்கா தளம் பச்சாகூட்டெக்க்கு ஒரு தோட்டமாக கட்டப்பட்டது என்று நம்புகிறார்கள். [2]

பச்சாகூட்டெக்
17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பச்சக்குடியின் ஓவியம்.
இன்கா பேரரசின் சபா இன்கா
ஆட்சிக்காலம்1438-1471
முன்னையவர்விராகோச்சா
பின்னையவர்துப்பாக் இன்கா யுபான்கி
பிறப்பு1438க்கு முன்னர் [1]
குசிகன்ச்சா அரண்மனை, குசுக்கோ, இன்கா பேரரசு, நவீன பெரு
இறப்பு1471
படலாக்டா அரண்மனை, குசுக்கோ, இன்கா பேரரசு, நவீன பெரு
இராணிமாமா அனவர்க்கி
குழந்தைகளின்
பெயர்கள்
துப்பாக் இன்கா யுபான்கி, அமரு யுபான்கி
பெயர்கள்
பச்சாகூட்டெக் இன்கா யுபான்கி
கெச்வாபச்சகுட்டி இன்கா யுபான்கி
எசுப்பானியம்பச்சகூட்டெக் இன்கா யுபான்கி
அரசமரபுஅனான் குசுக்
தந்தைவிராகோச்சா இன்கா
தாய்மாமா ருந்து
மார்டின் டி முருவாவின் 17 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது நாளாகமத்தில், கோரிகாஞ்சாவில் பச்சாகூட்டெக் இன்டியை (சூரியக் கடவுள்) வழிபடும் சித்தரிப்பு.
குசுகோவில் உள்ள பச்சகுட்டியின் அரண்மனையின் இடிபாடுகளின் ஒரு பகுதி.

பச்சக்குட்டி என்றால் "உலகின் சீர்திருத்தவாதி" என்றும், [3] யுபான்கி என்றால் "மரியாதைக்குரிய" எனப் பொருள். இவரது ஆட்சியின் போது, குசுக்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு பேரரசாக வளர்ந்தது. அது சிமு பேரரசுடன் போட்டியிட்டது. இறுதியில் முந்தியது. மூன்று தலைமுறைகளுக்குள், குசுக்கோ பள்ளத்தாக்கிலிருந்து கிட்டத்தட்ட மேற்கு தென் அமெரிக்கா முழுவதும் இன்கா ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் ஒரு சகாப்தத்தை பச்சாகூட்டெக் தொடங்கினார். வரலாற்றாசிரியர் கார்சிலாசோ டி லா வேகாவின் கூற்றுப்படி, தெற்கு அரைக்கோளத்தின் அந்தீசில் சூரியக்கடவுளை கொண்டாடுவதற்காக பச்சகுட்டி இண்டிர்யாமி வழிபாட்டை தொடங்கி வைத்தார். [4] பச்சகுட்டி பெரும்பாலும் இன்காக்களின் சூரிய வழிபாட்டின் தோற்றம் மற்றும் விரிவாக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளார். [5] [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Life of Pachacuti Inca Yupangui". Bilingual Review, Bilingual Review Press, 1 May 2001
  2. Rowe, John, 1990. "Machu Picchu a la luz de documentos de siglo XVI". Historia 16 (1): 139–154, Lima.
  3. Cameron 1990, ப. 58.
  4. "Inti Raymi, The Celebration of the Sun". Discover Peru, www.discover-peru.org/inti-raymi/.
  5. Steele & Allen 2004, ப. 246.
  6. D'Altroy 2003, ப. 147.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சாகூட்டெக்&oldid=3830311" இலிருந்து மீள்விக்கப்பட்டது