பச்சை ஒளிர் புரதம்

பச்சை ஒளிர் புரதம்  (green fluorescent protein (GFP) ) ஊதா அல்லது புற ஊதாக் கதிர்கள் படும் போது பச்சை நிறத்தில் ஒளிரும் புரதமாகும்.[1][2] முதன் முதலில் இது அக்வாரியா விக்டோரியா எனும் ஜெல்லி மீனில் கண்டறியப்பட்டது.  

மூலக்கூற்று உயிரியல் துறையில் மரபணு வெளிப்பாட்டைக் கண்டறிவதில் பச்சை ஒளிர்புரதம் பெரிதும் பயன்படுகிறது. மார்டின் சால்ஃபே, ஒசாமு சிமோமுரா, ரோகர் சியன் ஆகியோர் இப்புரதம் குறித்த ஆய்விற்காக 2008 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றனர்.

மேற்கோள்கள் 

தொகு
  1. "Chemical and physical properties of aequorin and the green fluorescent protein isolated from Aequorea forskålea". Biochemistry 17 (17): 3448–53. Aug 1978. doi:10.1021/bi00610a004. பப்மெட்:28749. 
  2. "The green fluorescent protein" (PDF). Annual Review of Biochemistry 67: 509–44. 1998. doi:10.1146/annurev.biochem.67.1.509. பப்மெட்:9759496. http://tsienlab.ucsd.edu/Publications/Tsien%201998%20Annu.%20Rev.%20Biochem%20-%20GFP.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_ஒளிர்_புரதம்&oldid=2747410" இலிருந்து மீள்விக்கப்பட்டது