பச்சை நீர்க்கோலி

பச்சைநாகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
Macropisthodon
இனம்:
M. plumbicolor
இருசொற் பெயரீடு
Macropisthodon plumbicolor
(Theodore Edward Cantor, 1839)

பச்சை நீர்க்கோலி அல்லது பச்சைநாகம் (Macropisthodon plumbicolor) என்பது ஆசியாவில் காணப்படும் ஒரு நஞ்சில்லா பாம்பு இனமாகும்.

விளக்கம் தொகு

 
Illustration of the scale pattern on a juvenile.
 
இந்தியாவின் பூனாவில் ஒரு பச்சைநாகம்
 
காட்டில் ஒரு பச்சைநாகம்.

இவற்றின் தலை அகன்ற நடுத்தர அளவுள்ளவை ஆகும். வழுவழுப்பான மேடான செதில்களுடன் அடர் பச்சை நிறத்துடன், உடலில் ஒழுக்கற்ற கோடுகளையும் கொண்டிருக்கும். இவை வட்ட வடிவிலான கண்மணிகளைக் கொண்ட பெரிய கண்கொண்டிருக்கின்றன. உடலின் அடிப்பகுதி சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும். இவற்றின் கழுத்தில் v வடிவ குறியீடு காணப்படும். அச்சுருத்தப்பட்டால் நாகப்பாம்பு போன்று தலை உயர்த்ததி அச்சுறுத்தும். இதற்கு பிடித்து உணவு தேரைகள் ஆகும்.[1]

முழுமையாக வளர்ந்த இப்பாம்புகள் 2 அடி (0.61 மீ) நீளம் இருக்கும். இப்பாம்புகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மலைப்பகுதிகள், சமவெளிகளில் உள்ள காடுகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது. ஆனைமலை பகுதிகளில் 4,700 அடி (1,400 மீ) உயரம்வரைக் காணப்படுவதாக டபிள்யூ டேவிசன் அவர்களின் கூற்று.[1] இப்பாம்புகள் வங்கதேசம், மியான்மார், பாக்கித்தான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது . [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Smith, M. A. 1941. Fauna of British India. Reptilia and Batrachia. p.315-316
  2. Macropisthodon plumbicolor at the Reptarium.cz Reptile Database
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_நீர்க்கோலி&oldid=2672145" இலிருந்து மீள்விக்கப்பட்டது