பச்சோந்தி
பிராடிபோதியான் புமிலம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
இகுவானியா
குடும்பம்:
கெமாலினிடே
பேரினம்

பிராடிபோதியான்
காலூம்மா
கெமாலியோ
பர்சிபெர்
கின்யோஜியா
நாடிசிகாம்பியா
'புருக்காசியா
ரைப்பெலியோன்
ராம்போலியான்

பச்சோந்தி (Chameleon) என்பது செதிலுடைய ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு பல்லிக் குடும்பம் ஆகும். இதில் மொத்தம் 203 இனங்கள் உள்ளன. இக்குடும்பத்தின் பல இனங்கள் பச்சை நிறத்தில் காணப்படுவதால் பச்சோந்தி என்று அழைக்கப்படுகின்றது.

பச்சோந்திகளுள் சில இனங்கள், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தன. இதற்கு காரணம் அவற்றின் தோலில் உள்ள நிற கலங்களுக்கும், மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருப்பதாகும். பச்சோந்திக்கு காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. பச்சோந்தியின் கண்கள் ஒரு பொருளின் உயரம்,அகலம்,ஆழம் போன்ற முப்பரிமாணங்களையும் காணக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.ஒவ்வொரு கண்னும் தனித்தனியாக வேலை செய்யக்கூடியது. 360 பாகை அளவுக்குப் பார்வை விரியும்.[1]

பச்சோந்திகள் கட்புலனாகும் ஒளியை மட்டுமன்றி புற ஊதாக்கதிர்களையும் கண்டுணரவல்லன.[2]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 17.12.2014
  2. "Chameleon News, August 2004". Archived from the original on 2008-01-22. பார்க்கப்பட்ட நாள் 2008-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சோந்தி&oldid=4047708" இலிருந்து மீள்விக்கப்பட்டது