பஜாதேர் நடவடிக்கை
பஜாதேர் நடவடிக்கை (Operation Bajadere) என்பது இரண்டாம் உலகப் போரின் சர்ச்சைக்குரிய சிறப்புப் படையாகும்.
சில ஆதாரங்கள் இது சனவரி 1942இல் இந்திய படையணியின் பலம் வாய்ந்த சுமார் 100 துணை இராணுவத்தால் தொடங்கப்பட்டது என்று கூறுகின்றன. பலுசிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவி, பிரிட்டிசு சொத்துக்களுக்கு எதிரான நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும், பிரித்தானியா இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் தேசியக் கிளர்ச்சிக்குத் தயார்படுத்தும் பணிகளை இந்தப் படைகள் மேற்கொண்டன.
ஈரான், இந்தியா , ஆப்கானித்தானுக்கு காக்கேசியா வழியாக திட்டமிட்ட தாக்குதலுக்காக இந்துக்களையும்,முஸ்லிம்களையும் ஜெர்மனியின் புலனாய்வு நிறுவனமான அப்வேர் தீவிரமாக நாடியது. இந்திய இராணுவம் என்று அழைக்கப்படும் 100-பேர் கொண்ட பிரிவுக்கு ஜெர்மன் இராணுவத்தின் சிறப்புப் படைகளான பிராண்டன்பர்கர்கள் பயிற்சி அளித்தனர். சனவரி 1942 இல், இந்த அலகு பாரசீகத்தில் பாராசூட் செய்யப்பட்டு இந்தியாவில் ஊடுருவியது. இவர்கள் நாசவேலைகளில் ஈடுபட்டனர். கருத்து வேறுபாட்டை உருவாக்க முயன்றனர். பிரிட்டிசு ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை நோக்கி பணிகளை செய்தனர். காபுலில் உள்ள அப்வேர்r இணைப்பானது, பல மாதங்களுக்குப் பிறகு இந்த செயல்பாடுகள் வெற்றிகரமாக நடந்ததாக அறிவித்தன. இருப்பினும், சுடாலின்கிராட்டில் ஏற்பட்ட தோல்வி, இந்தியாவை நோக்கி பெரிய தாக்குதல் எதுவும் நடக்காமல் போனது.
இருப்பினும், மற்ற ஆதாரங்கள் இந்த நடவடிக்கை ஒருபோதும் நடத்தப்படவில்லை என்று கூறுகின்றன. உதாரணமாக, வரலாற்றாசிரியர் அட்ரியன் ஓ சல்லிவன் இது "கற்பனைக்கதை" என்றும், "பதிவுகளில் இந்த செயல்பாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை" என்றும் எழுதியுள்ளார். ஆகத்து 1942 வரை இந்தியப் படை உருவாக்கப்படவில்லை என்றும், ஜெர்மனியர்களுக்கு இத்தகைய நடவடிக்கை தளவாட ரீதியாக சாத்தியமற்றது என்றும் அவர் குறிப்பிடுகிறார். [1]
குறிப்புகள்
தொகு- Citations
- ↑ O'Sullivan 2015, ப. 171.
- Works consulted
- O'Sullivan, Adrian (2015). Espionage and Counterintelligence in Occupied Persia (Iran): The Success of the Allied Secret Services, 1941-45. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1137555571.
- Weale, Adrian (1994). Renegades: Hitler's Englishmen. Weidenfeld & Nicolson. pp. 137–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0297814885.