பஞுனிபோ கோவில்

பானியுனிபோ என்பது இந்தோனேசியாவின், யோகியாகர்த்தா, ஸ்லேமேன் ஆட்சிப்பகுதியின், பிரம்பானன், செபிட் குக்கிராமத்தில் உள்ள  9 வது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பௌத்தக் கோயிலாகும். நவீன யோகியாகர்த்தின் கிழக்குப் பகுதியில் ரத் புகோ தொல்லியல் பூங்காவின் தென்கிழக்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நெல் வயல்களால் சூழப்பட்ட ஒரு குறுகிய பள்ளத்தாக்கில் மேடங் அரசாட்சிக் காலத்திய இந்தக் கோயில் அமைந்துள்ளது. மேலும் வடக்கில் பிரம்பானான் கோயில், தெற்கே கூனுங் ஸீயு மலைகள், குனுங் கிதுல் மலைகளின் நீட்சியான உள்ளது.

தென்கிழக்கு ரத் புகோவின் நெல் வயல்களின் மையத்தில் அமைந்துள்ளது பானியுனிபோ

கட்டிடக்கலை

தொகு

பானியுனிபோ ஸ்தூபியானது தனித்துவமான கிரீடம் போன்ற வளைந்த கூரை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. நடு ஜாவாவில் எஞ்சியுள்ள புத்தக் கோயில்களில் இந்த மாதிரி அமைப்பு தனிப்பட்டதாக உள்ளது. வளைந்த கூரையானது பொதுவாக தாமரை அல்லது பத்ம இதழ்களை அடையாளப்படுத்துவது அல்லது பண்டைய ஜாவா கட்டிடக்கலையில் பொதுவான ஐஜீக் இழைகளிலிருந்து (அரிங்கா மரத்தைச் சுற்றிபிணைந்த கருப்பு இழைக்கொடி) இருந்து உருவாக்கப்பட்ட கரிம கூரையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும், மேலும் இன்றும் பலினீஸ் கோவில் கூரை கட்டமைப்பில் காணப்படுகிறது. முக்கிய கட்டமைப்பானது தரைமட்டத்தில் ஸ்தூபியை சூழந்த கட்டமைப்பு ஆகும், இதன் அடித்தளம் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. இந்த ஸ்தூபிகளின் அஸ்திவாரங்கள் கோயிலின் தெற்குப் பகுதியில் மூன்று ஸ்தூபிகளின் வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றன, கிழக்குப் பக்கத்தில் மூன்று ஸ்தூபிகளின் அடித்தளங்கள் உள்ளன.   வடக்குப் பகுதியிலும் மூன்று ஸ்தூபிகளின் தளத்தைக் கொண்டிருக்கலாம், இருப்பினும் அது இன்னும் பூமியில் ஒரு மீட்டர் கீழே புதைந்துள்ளது. முதன்மைக் கோவில் மேற்கு நோக்கி உள்ளது.[1]

 
கோவில் கோட்டங்கள்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞுனிபோ_கோவில்&oldid=2899816" இலிருந்து மீள்விக்கப்பட்டது