பஞ்சமம்
இந்திய இசைப்பிரிவுகளில் ஒன்றான கருநாடக இசையில் உள்ள ஏழு சுவரங்களான 'ச-ரி-க-ம-ப-த-நி'யில் ஐந்தாவது பஞ்சமம். ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து) பண்சமம் பஞ்சமம் ஆனதென்றும் கொள்ளலாம். ஏழு சுவரங்களின் பெயர்கள்:
- ச - சட்ஜம்
- ரி - ரிசபம் (சுத்த ரிசபம்,சதுஸ்ருதி ரிசபம்,சட்ஸ்ருதி ரிசபம்)
- க - காந்தாரம் (சுத்த காந்தாரம்,சாதாரண காந்தாரம்,அந்தர காந்தாரம்)
- ம - மத்தியமம் (சுத்த மத்தியமம்,பிரதி மத்தியமம் )
- ப - பஞ்சமம்
- த - தைவதம் (சுத்த தைவதம்,சதுஸ்ருதி தைவதம்,சட்ஸ்ருதி தைவதம்)
- நி - நிசாதம் (சுத்த நிசாதம்,கைசிக நிசாதம்,ககாலி நிசாதம்)
ஒவ்வொரு சுவரமும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்.ஆனால் சட்ஜமும் பஞ்சமமும் மட்டுமே ஒரேநிலையைக் கொண்டிருக்கும். நடு சுவரமான மத்தியமம் இரு நிலைகளைக் கொண்டிருக்கும்.
- சட்ஜம் என்பதற்கு 'இன்னும் ஆறு சுரங்கள் பிறக்க ஏதுவாக அமைந்தது' என்ற பொருளையும்,
- ரிஷபம் என்பதற்கு காளைமாட்டின் ஒலி என்றும்,
- காந்தரம் என்பதற்கு இன்ப சுகம் தரும் காந்தர்வ ஒலி என்றும்,
- மத்திமம் என்பதற்கு நடுவில் உள்ளது என்றும்,
- பஞ்சமம் என்பதற்கு ஐந்தாவது என்றும்,
- தைவதம் என்பதற்கு தெய்வத் தொடர்புடையது என்றும்,
- நிஷாதம் என்பதற்கு 'ஆறு சுரங்களும் படிப்படியாய் உயர்ந்து தன்னிடம் சேரப் பெற்றது' என்றும் கூறிவருவதற்கு மறுப்பும் உண்டு[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஏழு சுரங்கள்". உணர்வுகள். பார்க்கப்பட்ட நாள் 2009-06-28.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகு- carnaticmusic.esmartmusic.com பரணிடப்பட்டது 2009-04-13 at the வந்தவழி இயந்திரம்