பஞ்சாக்கர தரிசனம்
பஞ்சாக்கரம் என்பது திருவைந்தெழுத்து. இதனை மனத்தில் நினைப்பது பஞ்சாக்கரம். பஞ்சாக்கர தரிசனம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் இயற்றிய நூகளில் ஒன்று. மறைஞான சம்பந்தரின் மாணாக்கர் மறைஞான தேசிகர். இவர் தமது உரையில் பஞ்சாக்கர நூலைக் குறிப்பிட்டு அதன் பாடல்களை எடுத்துக் காட்டுகிறார். இந்த நூல் வெண்பாக்களால் ஆனது. எடுத்துக்காட்டுப் பாடல்களைத் தவிர நூல் முழுமையாக இல்லை.
- யாரை இலிங்கமாம் நாளம் வகரமாம்
- சிகாரம் மேற்பீடம் தெரிகின் - மகாரந்தான்
- கண்டமே ஆகும் கவின் ஆர் அடிப் பீடம்
- பண் திகழும் நம் மகனாம் பார்.
- நகரமே சத்தியோ சாதகமும் நாடின்
- மகரந்தான் வாமம் மதிக்கில் - பகருங்கால்
- சிகார வகாரம் புருடம் அகோரம்
- யகாரம் ஈசான முகம் என்.
இந்தப் பாடல்கள் திரு ஐந்து எழுத்துக்கும் விளக்கம் கூறிக் காட்சிப் படுத்துகின்றன. [3]
- ஒரு நாழி உப்பும் ஒரு நாழி அப்பும்
- இரு நாழி, இந்த இரு நாழி - ஒரு நாழி
- ஆம் அளவில் நீருள் உடங்கிவிடும் உப்புப்போல்
- ஆம் உடலில் ஆவி அடைந்து.
என்றார் குரவர் என மறைஞான தேசிகர் கூறும் பாடலும் இந்த நூலின் பாடல் எனக் கொள்ளத் தக்கது. [4]
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 180.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது
- ↑
- ந - சத்தியின் சாதகம், மகன்
- ம - வாமம், கண்டம்
- சி - புருடம் - இலிங்கம் இருக்கும் பீடம்
- வா - அகோரம், நாளம் என்னும் துளை
- ய - ஈசான முகம், இலிங்கம்
- ↑ ஒரு நாழி நீரும் அரை நாழி உப்பும் ஒன்றரை நாழி ஆகாது ஒரு நாழி நீரானது போல - நச்சினார்க்கினியார் தொல்காப்பிய உரை இங்கு ஒப்புநோக்கத் தக்கது.