பஞ்சாபி பத்தி

பஞ்சாபி பத்தி (bhathi, (பஞ்சாபி: ਭੱਠੀ) என்பது பஞ்சாப் பகுதியில் பயன்படுத்தப்படும் ஒருவகை அடுப்பாகும். இது கல் அடுப்பை (masonry oven) ஒத்தது.[1]

பத்திகள் அதிகமாக இராஜஸ்தானிலும் பஞ்சாப் பகுதியிலும் பயன்படுத்தப்படுகின்றன. இராஜஸ்தானில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய பத்திகளின் மேற்புறம் மூடப்பட்டிருக்கும்; சமைக்க வேண்டிய பார்லி போன்ற தானியங்கள் பாத்திரங்களில் அடுப்பின் உட்புற அமைப்பில் வைக்கப்படுகின்றன.[2] திறந்த மேற்புறத்துடனும் பத்திகள் உள்ளன. அதிகளவில் உணவு சமைப்பதற்கு இவ்வகையான பத்திகள் பயன்படுகின்றன. மேற்புறத்தில் வாணலிகள் அல்லது பெரிய பாத்திரங்கள் வைக்கப்பட்டு அவற்றில் உணவு சமைக்கப்படுகிறது[3]

வடிவமைப்பு தொகு

 
பாரம்பரிய பஞ்சாபி பத்தியைப் போன்று அமைக்கப்பட்ட உலோகத்தாலான பத்தி.

பஞ்சாப் பகுதியில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான பத்திகள் அமைக்கப்படும் விதம்:

தரையில் ஒரு துளை தோண்டப்பட்டு அத்துளையின் மறுபக்கத்தில் அடுப்பிலிருந்து புகை வெளியேறுவதற்கான உருளை வடிவ திறப்பு அமைக்கப்படுகிறது.[4] துளையின் பக்கங்கள் களிமண்ணால் பூசப்பட்டு, தரைக்கு மேல் வட்டவடிவில் சுவர் அமைக்கப்படுகிறது. பத்தியின் ஒரு பக்கத்தில் விறகு, மூங்கில் இலைகள் அல்லது புற்கள் கொண்டு தீமூட்டுவதற்கான திறப்பு ஏற்படுத்தப்படுகிறது.[5] பத்தியின் மேற்புறம் திறந்திருந்திருக்கும். அவ்வாறு திறந்திருக்கும் பகுதியானது உலோகப் பாத்திரங்களால் மறைக்கப்பட்டு, அதிகளவான வெப்பத்தைப் பெறும் பொருட்டு அந்த உலோகப் பாத்திரங்களில் மணல் நிரப்பப்பட்டிருக்கும். பத்திகளில் வறுக்கப்பட்ட வெல்லம் கலந்த சோளம், கோதுமை தானியங்கள் பஞ்சாப் பகுதியின் பாரம்பரியச் சுவைகொண்ட உணவுப் பொருட்களாகும்.[5] பழங்காலத்தில் பஞ்சாப் பகுதியின் சிற்றூர்கள் ஒவ்வொன்றிலும் பல பத்திகள் இருந்தன, ஆனால் இவ்வழக்கம் சிறிதுசிறிதாக மறைந்து கொண்டு வருகிறது.[6][5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_பத்தி&oldid=3561522" இருந்து மீள்விக்கப்பட்டது