பஞ்சாராம ஸ்தலங்கள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பஞ்சாராம ஸ்தலங்கள் சுருக்கம் :
தொகுமுன்பு ஒரு சமயத்தில் தேவர்களை கொடுமை படுத்திய தாரகாசூரனை அழிக்க சிவனிடம் வேண்டிய போது, தாரகாசூரன் சிறந்த சிவ பக்தன் ஆதலால் அவனை ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தனர். மஹாவிஷ்ணு அவனை அழிக்க முருகப்பெருமானை நாடுமாறு கூறினார். தாரகாசூரன் ஆத்ம லிங்கத்தை தன் கழுத்தில் வைத்து கொண்டு இருந்தான். முருகன் தாரகாசூரனை அழிக்க, அந்த ஆத்ம லிங்கம் ஐந்து பாகங்களாக உடைந்து ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்யபட்டது. அமராராமம் , குமராராம் பாணங்கள் உயரமானவை எனவே இரண்டு மாடி அமைப்பாக கோயில் உள்ளது. கோடிபலி என்று ஊர் திராசாராமத்திலிருந்து 12கி.மீ தூரத்தில் உள்ளது..இங்கு சிவ லிங்கத்தில் நீர் ஊறுகிறது . எவ்வளவு நீர் ஊறினாலும் படி தாண்டி வருவது இல்லை.
அமராராமம் :
தொகுதாராசூரனை வதம் செய்த போது முருகன் அவர் கழுத்தில் இருந்த சிவலிங்கத்தை தகர்க்க அந்த பாகம் விழுந்த முதல் தலமே அமராராமம் தலம் ஆகும். ஆதி அந்தம் இல்லாத இந்த பரம்பொருளுக்கு அமரேஸ்வரர் என பெயரிட்டு இந்திரன் பிரதிஷ்டை செய்தான். தேவ குரு பிரகஸ்பதி இத்தலத்தில் காஞ்ச பர்வதம் பாதாளம் வரை ஊன்றி நின்று கிருஷ்ணாநதி அந்த மலையை சுற்றி செல்லும்போது அமரேஸ்வரர்கோ அல்லது ஆலயத்திற்கோ எந்த பாதிப்பு ஏற்படாதவன்னம் அம்பாள் மற்றும் இதர பரிவார தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்தார். அந்த நாளிலிருந்தே தேவர்கள் அனைவரும் சம்ஹாரத்திற்கு செல்லுவதற்கு முன் இத்தல பெருமானை தங்கி வழிபட்டு தான் செல்வார்கள் என ஐதீகம். இந்திரன் வழிபட்ட ஸ்தலமாதலால் அமரேஸ்வரம் என்றும் அமராவதி என்கிற நதியின் பெயரும் அமைந்தது.
வழி: விஜயவாடாவிலிருந்து 40கிமீ குண்டூர் அருகே உள்ளது.
திராஷாராமம் :
தொகுதாராசூரனை வதம் செய்த போது முருகன் அவர் கழுத்தில் இருந்த சிவலிங்கத்தை தகர்க்க அந்த பாகம் விழுந்த இரண்டாம் தலம் திராஷாராமம் ஆகும். தேவர்கள் ஸ்வாமியை அமிர்தலிங்கமாக இப்பகுதியில் பிரதிஷ்டை செய்து சம்ப்ரோஷணம் செய்தனர். கோதாவரி தேவதையை இப்பகுதிக்கு வர வேண்டினர். அவளும் அங்கீகரித்தாள். சப்தரிஷிகளை தாண்டி வந்தாள். சப்த கோதாவரி என்கிற பெயரும் பெற்றது. இந்த தலத்தில் தேவர்களால் பீமேஸ்வரர் என்கிற பெயரோடு சுயம்பு லிங்கமாக தோன்றி மார்கழிமாதம் சுத்த சதுர்தசி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டார். கர்ப்பகிரகம் உஷ்ணத்தின் மிகுதியால் இத்தலத்தை சுற்றி எட்டு திக்குகளில் எட்டு சோம லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததால் உஷ்ணம் தணியும் என்கிற வாக்கு கேட்டது. அவ்வணமே எட்டு திசையில் பிரதிஷ்டை செய்தனர். அஷ்டதச சக்தி பீடத்தில் பன்னிரெண்டாவது பீடமாக விளங்கும் பவித்ர சக்தி பீடமாகவும் திகழ்ந்து மாணிக்காம்பாள் அருள் பாலிக்கிறார். நவ பிரம்மங்களில் ஒருவரான தக்ஷப்ரஜாபதி இல்லத்தில் யாகங்கள் செய்ததால் தக்ஷராமம் என்பது மருவி திராஷாராமம் ஆனது. தக்ஷப்ரஜாபதியின் புதல்வியான சதி தேவியை இத்தலத்தில் சிவ பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
வழி: கிழக்கு கோதாவரி மாவட்டம். ராஜமன்றியிலிருந்து 50கிமீ. காக்கிநாடா வழியாகவும் செல்லலாம். காக்கிநாடா சாமர்கோட்டிலிருந்து 16கிமீ. அங்கிருந்து 25கிமீ .ஷீராராமத்திலிருந்து மார்த்தேர், பெணுக்கொண்டா வழியில் வந்தால் 50கிமீ .
குமராராமம்:
தொகுநான்கு திசை உள்ள கோபுரங்கள் கொண்டவை. இக்கோயிலின் பிரகாரங்கள் 18 அடி உயரம் உள்ளவை. இக்கோயிலின் கட்டிட அமைப்பு திராஷாராமத்தை போல் உள்ளது. கிழக்கு திசையில் உள்ள கிணற்று நீரில் கால்களை கழுவி கொண்டோ அல்லது நீராடி கொண்டோ வழிப்பட வேண்டும் என்பது ஐதிகம். இந்த நீர் பீமகுண்டம்,புஷ்கரணி,குமார நதி ,குமார சரோவர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை அசைத்தால் அசையும் தன்மை கொண்டது. இங்குள்ள ஸ்வாமி 12அடி உயரம் உடையவர். இரண்டு தளங்களாக உள்ள கர்ப்பகிரகத்தில் படியேறி ஸ்வாமியை தரிசிக்க வேண்டும். ருத்திரபாகத்திற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்படுகிறது. யோகேஸ்வரர் என்று அழைக்கபடும் ஸ்வாமி பிராணாயாமத்தின் மூலம் இந்த 2 நாடிகள் வழியாக காற்று சிரசிலிருந்து பரமானந்த்தை தரும் சுகத்தை தர வல்லவராக கருதப்படுகிறார். சித்திரை, வைகாசி மாதங்களில் சூரிய ஒளி ஸ்வாமியின் மீதும் மாலையில் அம்பாளின் பாதங்கள் மீதும் விழுவது சிறப்பான அம்சம் ஆகும்.
வழி: கிழக்கு கோதாவரி மாவட்டம் . சாமர்க்கோட் ரயில் நிலையம் அருகே.
சோமாராமம் :
தொகுஒரு சமயம் சந்திரனை கந்தர்வர்கள் சிறைபிடித்து வைத்தனர். இதனால் இரவில் மலர்கள் மலர்வது, குளிர்ச்சியான சூழல் தடைபட்டது. மக்கள் இருட்டின் மிகுதியால் வெளியே செல்ல பயந்தனர். இதனால் வருத்தமடைந்த தேவதைகள் ப்ரஹ்மலோகம் சென்று முறையிட்டனர். பிரஹ்மன் சந்திரனை மீட்டு வர உபாயம் கூறி சரஸ்வதியினை தேவதைகளுடன் அனுப்பி வைத்தார். சரஸ்வதிக்கு பிடிக்காததால் மீண்டும் சத்யலோகம் திரும்பினார். இதனால் கந்தர்வர்கள் மீண்டும் சந்திரனை சிறைபிடிக்க திட்டமிட்டனர். இதனால் தேவதைகள் ஐந்து பாகங்களில் ஓர் பாகம் விழுந்த குனிபுடி என்னும் இப்பகுதியில் உள்ள சிவ பெருமானிடம் அடைக்கலம் புகுந்தனர். சந்திரன் தன்னை காத்து கொள்ள பிரதிஷ்டை செய்த லிங்கமாதலால் இத்தலம் சோமாராமம் என்றும் ஸ்வாமியின் பெயர் சோமேஸ்வரர் என்றும் ஆனது. மேலும் தக்ஷனின் வாக்குப்படி இத்தல பெருமானை வழிபட்டு சாபவிமோஷனம் பெற்றதாக 12 ஜோதிர்லிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள தீர்த்தம் சந்திரபுஷ்கரணி என பெயர்பெற்றதாக பஞ்சாராம புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். சந்திரனால் வரும் தோஷம் இத்தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் நிவர்த்தியாகும் என நம்பப்படுகிறது. வழி: மேற்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியிலிருந்து 100கிமீ .
ஷிராராமம் :
தொகுதிரிமூர்த்திகள் அருள் பாலிக்கும் தலமாக இத்தலம் உள்ளது. பாலகொல்ல ஊரிலிருந்து எங்கு பார்த்தலும் தெரியக்கூடிய 120 அடி உயரமுள்ள ராஜகோபுரம் 9 நிலைகளுடன் திகழ்கிறது. இந்த இறைவனை கொப்ப லிங்கேஸ்வரர் என அழைக்கின்றனர். மேலும் அம்ருதலிங்கத்தின் சிரஸு பாகமாக இந்த லிங்கம் அமைந்தது என ஸ்தல புராணம் கூறுகிறது. உத்தராயணம் தக்ஷிணாயன புண்ய காலங்களில் ராஜகோபுரத்தின் இரண்டாம் நிலையின் வழியாக கர்ப்ப கிரகத்தில் உள்ள ஷீரலிங்கத்தின் மீது சூரிய ஒளிகள் விழுவது கண்கொள்ளா காட்சியாகும். இந்த ஸ்வாமியினை வழிப்பட்டால் வறுமை நீங்கும் என ஐதிகம் . சபாமண்டபத்தில் உள்ள கணபதியினை நந்திதேவரோடு இணைந்து ஷுரலிங்க ஸ்வாமியை தரிசிக்க வேண்டும் என ஐதீகம்.
வழி:மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்திலிருந்து 20கிமீ.