பஞ்சுகாக்கு அருவி

பஞ்சுகாக்கு அருவி (Panchghagh Falls) என்பது இந்தியாவின் சார்க்காண்டு மாநிலத்தில், குந்தி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவியாகும்.[1]

பஞ்சுகாக்கு அருவி
Panchghagh Falls
அமைவிடம்குந்தி மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா
ஆள்கூறு22°56′41″N 85°15′17″E / 22.94472°N 85.25472°E / 22.94472; 85.25472
ஏற்றம்600 மீட்டர்கள் (2,000 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை5
நீர்வழிபானாய் ஆறு

அருவி

தொகு
 
சார்க்கண்டு மாநிலத்தில் அமைந்துள்ள பஞ்சுகாக்கு அருவி

கடினமான மற்றும் துண்டிக்கப்பட்ட நிலப்பரப்பு வழியாக இந்த அருவி, பனாய் நதி ஐந்து வெவ்வேறு நீரோடைகளில் கிளைத்து, பாறைகளின் வழியாக பாய்ந்து எங்கும் நிறைந்த இனிமையான சத்தத்தை உருவாக்குகிறது. சொன்கா மற்றும் பஞ்சுகாக்கு அருவிபோல மிக உயரத்திலிருந்து இந்த அருவி கீழ் வீழ்வதில்லை. இருப்பினும், ஒருவர் இதன் அருகே வரும்போது தண்ணீர் விழும் சத்தத்தை கேட்க முடியும். ஏனென்றால் இதன் ஐந்து கிளைகளும், சுழலும் நீரோடைகளும் பாறைகள் மீது விழுகின்றன. இந்த அருவியினை பார்ப்பதும் அருவியின் ஓசையினை கேட்பதும் ஓர் விருந்து போன்றது.[1]

இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான அருவிகள் இருந்தபோதிலும், பஞ்சுகாக்கு அருவி, பாதுகாப்பானதாக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் விருப்பமாக உள்ளது. நீர் குறைந்த உயரத்தில் இருந்து விழுகிறது, இதனால் சுற்றுலாப் பயணிகள் விரைவாக நீரின் ஓட்டத்தில் மகிழ்வார்கள். பெரும்பாலான மக்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலாவிற்கு இங்கு வருகிறார்கள்.

சார்க்கண்டு அரசாங்கத்தின் சுற்றுலாத் துறையின் திட்டங்களின்படி, பஞ்சுகாக்கு அருவிக்கு விரைவில் ஒரு கியோஸ்க், உணவகம், துரித உணவு கடை, விளக்கு மற்றும் கழிப்பறைகள் வசதிகளுடன் காவற்கோபுரம் விரைவில் அமைய இருக்கின்றன.[2][3]

போக்குவரத்து

தொகு

பஞ்சுகாக்கு அருவி குந்தியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் சாய்பாசா செல்லும் சாலையில் உள்ளது. குந்தி தேசிய நெடுஞ்சாலை 75 ராஞ்சி-சாய்பாசாவில் அமைந்துள்ளது.[4] [5]

மேற்கோள்கள் ‌

தொகு
  1. 1.0 1.1 "Panchghagh Falls – Khunti, Jharkhand". Jharkhand Feed (in அமெரிக்க ஆங்கிலம்). 9 January 2018. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Deafening silence of the waterfall". Calcutta, India: The Telegraph, 8 August 2006. 8 August 2006 இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605182955/http://www.telegraphindia.com/1060808/asp/jamshedpur/story_6584442.asp. 
  3. Gupta, Amit (26 September 2009). "Luxury holiday in lap of nature – State to spend Rs 8 crore for hot water spa in Hazaribagh, watchtower in Khunti & museum in Chatra". Calcutta, India: The Telegraph, 26 September 2009 இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605184706/http://www.telegraphindia.com/1090926/jsp/jharkhand/story_11544697.jsp. 
  4. "JHARKHAND AT A GLANCE". பார்க்கப்பட்ட நாள் 26 April 2010.
  5. "Panch Gagh Falls". Archived from the original on 6 March 2012. பார்க்கப்பட்ட நாள் 26 April 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சுகாக்கு_அருவி&oldid=3907253" இலிருந்து மீள்விக்கப்பட்டது