பஞ்சுத்தக்கை
பஞ்சுத் தக்கை (tampon) உடலின் நீர்மங்களை உறிஞ்சிக் கொள்ள உடல் குழியொன்றில் அல்லது காயத்தில் நுழைக்கப்படும் உறிஞ்சுத் தன்மை கொண்ட, பொதுவாக பஞ்சு, ரேயான் அல்லது இவற்றின் கலவையாலான, தக்கையாகும். மிகப் பொதுவாக இது மாதவிடாய் காலத்தில் யோனியினுள் நுழைக்கப்பட்டு விடாய்க்கால நீர்மங்களை உறிஞ்சிக்கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது. மூக்கிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படும்போதும் இது பயன்படுத்தப்படுகிறது. பல நாடுகளிலும் இதன் பயன்பாட்டை அரசுத் தரக்கட்டுப்பாட்டு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு வாரியங்கள் வரையறுக்கின்றன. இது ஆங்கிலத்தில் "டம்போன்" என்று பிரெஞ்சு வேர்ச்சொல்லில் இருந்து பயன்படுத்தப்படுகிறது.[1]
சான்றுகோள்கள்
தொகு- ↑ "Definition and etymology of tampon". Archived from the original on 2008-05-18. பார்க்கப்பட்ட நாள் 2012-11-29.