பஞ்சு விளக்கு
பஞ்சு விளக்கு அல்லது யாம் போத்தல் விளக்கு என்பது குறைந்த எண்ணெயைப் பயன்படுத்தி நீண்ட நேர ஒளி தரக் கூடிய ஒரு விளக்கு வடிவமைப்பு ஆகும். இது யாழ்ப்பாணத்தில் போர்க்கால பொருளாதாரத் தடையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
வடிவமைப்பு
தொகுஒரு சிறிய கண்ணாடிப் போத்தலின், பொதுவாக யாம் (jam) போத்தலின் அடியில் பஞ்சை வைப்பர். அதனுள் சிறிதளவு எண்ணெயைப் பஞ்சில் ஊறக் கூடியவாறு விடுவர். சிறிய வளையத்தில் திரியைப் பொருத்தி அந்த திரியின் அடி பஞ்சை மெதுவாகத் தொடும்படி வைத்து, அந்த வளையத்தைப் போத்தலின் விளிம்பில் கொழுவி விடுவர்.[1]