படேட்டி புச்சி

இந்திய அரசியல்வாதி

படேட்டி கோட்டா ராம ராவ் (Badeti Kota Rama Rao) ( சுமார் 1964 – 26 டிசம்பர் 2019), படேட்டி புச்சி என்றும் அழைக்கப்படும் [1] இவர், ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் உறுப்பினராக இருந்தார்.

படேட்டி கோட்டா ராம ராவ்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2014–2019
முன்னையவர்அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசன்
பின்னவர்அல்லா நானி காளி கிருட்டிண சிறீநிவாசன்
தொகுதிஏலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1964
இறப்பு26 டிசம்பர் 2019 (வயது 55)
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

சுயசரிதை

தொகு

தனது மேல்நிலைக் கல்விக்குப் பிறகு, புச்சி சர் சி. ஆர். ரெட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் தனது கல்லூரி படிப்பைத் தொடரவில்லை.[2] 2009 இல் ஏலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பிரசா ராச்யம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசன்|அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசிடம் தோல்வியடைந்தார்.[1] 2014 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு ஏலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] [4] [5] இவர் 2019 இல் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக ஏலூரில் போட்டியிட்டார். ஆனால் மீண்டும் அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசிடம் தோற்றார். [2]

இறப்பு

தொகு

புச்சி 26 டிசம்பர் 2019 அன்று 55 வயதில் மாரடைப்பால் இறந்தார் [1] [6] [7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Breaking: Former TDP MLA Badeti Bujji dies of heart attack in Eluru". 26 December 2019. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  2. 2.0 2.1 "BADETI KOTA RAMA RAO". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  3. "Andhra Pradesh Assembly Election Results in 2014". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  4. "List of Winners in Andhra Pradesh 2014". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  5. "Eluru Assembly Constituency Election Result". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  6. "టీడీపీలో విషాదం.. కీలక నేత బడేటి బుజ్జి కన్నుమూత." 26 December 2019. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  7. "తెదేపా నేత బడేటి బుజ్జి కన్నుమూత". 26 December 2019. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படேட்டி_புச்சி&oldid=3819069" இலிருந்து மீள்விக்கப்பட்டது