பட்சி பாதாளம்

கேரளத்தின் வயநாடு மாவட்டத்ததில் உள்ள இடம்

பக்ஷி பாதாளம் (Pakshi Pathalam) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு பறவைகள் சரணாலயம் மற்றும் சுற்றுலா தலமாகும்.

முனிகல் குகைகள் (பக்ஷி பாதாளம்)
பக்ஷிபாதாளம் காவற்கோபுரம்
பக்ஷிபாதாளத்தில் மலையேற்றம்
பக்ஷிபாதாளம் பாதையில் கேரள வனதுதுறையில் தகவல் பலகை

பிரம்மகிரி மலைகள்

தொகு

பட்சிபாதாளமானது கர்நாடகத்தின் பக்கம் பிரம்மகிரி மலைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியிலிருந்து கர்நாடகத்தின் இருப்பு அருவியை அடையளாம்.

சொற்பிறப்பியல்

தொகு

பக்ஷி என்றால் மலையாளத்தில் பறவை என்று பொருள். பாதாளம் என்றால் பேய்களின் பாதாள உலகம் என்று பொருள்.

இடம்

தொகு

திருநெல்லி நகரத்திலிருந்து வடகிழக்கில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் பட்சி பாதாளம் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகமான கல்பற்றாவிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இந்த மலை உள்ளது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 1740 மீ. உயரமுள்ளது. [1] பாபனசினி ஆறானது பிரம்மகிரி மலையிலிருந்து பாய்ந்து இப்பகுதியை வளமாக்ககுகிறது. 'பாபம்' என்ற சொல்லுக்கு பாவம் என்றும், 'நாசினி' என்றால் மலையாளத்தில் அழிக்கும் என்றும் பொருள் என்பதால் இந்த ஆறு அனைத்து பாவங்களையும் கழுவும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது.

ஈர்ப்புகள்

தொகு

பட்சி பாதாளமானது பன்முகத்தனைமயான பறவைகளைக் கொண்ட இடமாகும். இங்கே ஒரு குகை உள்ளது, இது பழங் காலத்தில் துறவிகளால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. [2] பட்சிபாதாளத்தின் மலையடுக்குகள் மலையேற்ற தளமாக புகழ்பெற்றவை. [3]

மேலும் காண்க

தொகு


குறிப்புகள்

தொகு
  1. https://www.google.co.in/maps/place/11%C2%B055'39.0%22N+75%C2%B059'50.6%22E/@11.927498,75.9952009,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.927498!4d75.997395?hl=en
  2. https://www.keralatourism.org/destination/pakshipathalam-wayanad/298
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-17. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்சி_பாதாளம்&oldid=3561538" இலிருந்து மீள்விக்கப்பட்டது