திருநெல்லி மகாவிஷ்ணு கோயில்

திருநெல்லி மகா விஷ்ணு கோயில் என்பது கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான விஷ்ணு கோயில்களில் ஒன்று. இது பிரம்மகிரி மலைக்குன்றை அடுத்த திருநெல்லியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கூத்தம்பலக் கூடத்தில் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அருகே உள்ள புனித மலை ஊற்றான பாபநாசி நீரானது பாவங்களைத் தீர்க்கக்கூடியது என்று கருதப்படுகிறது.[1][2][3]

திருநெல்லி கோயில் முன்தோற்றம்.

பஞ்ச தீர்த்தம்

தொகு
 
புனிதக் குளமான பஞ்சதீர்த்தம்

இந்தக் கோயிலின் தெற்குப் பக்கமுள்ள பஞ்ச தீர்த்தக்குளம் ஒரு புனிதக் குளமாக கருதப்படுகிறது. ஐந்து புனித ஆறுகளின் நீர் இக்குளத்தில் கலப்பதாக ஐதீகம். இதுவே இக்குளத்தின் பெயருக்குக் காரணம். இக்குளத்தின் நடுவே ஒரு மேடு உள்ளது. அதை அடைய ஒரு கல்பாலம் உள்ளது. இந்த மேட்டில் சரிவான கல் ஒன்று உள்ளது. இதை மகாவிஷ்ணுவின் பாதம் என்று கருதி விஷ்ணு பாதம் என்று அழைக்கின்றனர்.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thirunelli Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

தொகு
  1. Praveen, V. "Thirunelli Temple Darshan Guide Timings, Entry Fee, Online Booking". Gokshetra. Gokshetra. பார்க்கப்பட்ட நாள் 17 April 2023.
  2. "Sahyamalaka Kshetra". www.kamakotimandali.com. Archived from the original on 2009-06-27.
  3. "Unknown Spiritual Spots - Tirunelli - A mystic journey at Transcendental Wisdom Blog- about the Science of the Absolute and psychic sciences of the Intuitive Mind". Archived from the original on 23 June 2008. பார்க்கப்பட்ட நாள் 21 February 2009.