திருநெல்லி
திருநெல்லி என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும்.[1]
திருநெல்லி | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 11°53′57″N 76°01′26″E / 11.89926°N 76.02379°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | வயநாடு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,878 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 670646 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL-72 |
இந்த ஊரில் அமைந்துள்ள திருநெல்லி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
மக்கள்தொகையியல்
தொகு2001[update] இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, திருநெல்லியில் 5,774 ஆண்கள் மற்றும் 5,945 பெண்கள் உட்பட 11,719 பேர் உள்ளனர்.[1]
போக்குவரத்து
தொகுதிருநெல்லி ஊரை மானந்தவாடி அல்லது கல்பற்றாவில் இருந்து அணுகலாம். பெரிய மலை சாலை மானந்தவாடியை கண்ணூர் மற்றும் தலச்சேரியுடன் இணைக்கிறது. தாமரச்சேரி மலைப்பாதையானது கோழிக்கோடு கல்பற்றாவை இணைக்கிறது. குற்றியாடி மலைப்பாதை வடகரையை கல்பற்றா மற்றும் மானந்தவாடியுடன் இணைக்கிறது. பால்ச்சுரம் மலைப்பாதை கண்ணூர் மற்றும் இரிட்டியை மானந்தவாடியுடன் இணைக்கிறது. நிலம்பூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையும் மேப்பாடி ஊரின் வழியாக வயநாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கருநாடகத்தில் இருந்து பயணித்தால், திதிமதி-கோனிகொப்பால்-பொன்னம்பேட்டை-குட்டா (அனைத்தும் குடகு மாவட்டத்தில் உள்ள) நகரங்கள் வழியாக சாலை வழியாக அணுகலாம்.
அருகிலுள்ள தொடருந்து நிலையம் மைசூரில் உள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்-120 கி.மீ., பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம்-290 கி.மீ., மற்றும் கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்-58 கி.மீ. ஆகும்
மேலும் பார்க்கவும்
தொகு- கட்டிக்குளம்
- மானந்தவாடி
- வள்ளியூர்க்காவு
- கட்டிக்குளத்திற்கு அருகில் உள்ள திருநெல்லி கோவிலில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்சி பாதாளம் மலையேற்ற தளமாகும். குன்றின் மீது ஏராளமான பறவைகள் நிறைந்த பழங்கால குகை உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.