வள்ளியூர்க்காவு

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில்

வள்ளியூர்க்காவு (Valliyoorkkavu) என்பது தென் இந்தியாவில் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு மாவட்டத்தில் அமையப்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோவிலாகும். இந்தக் கோவில் மானந்தவாடி என்ற நகரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. வள்ளியூர்க்காவு கோவில் அன்னை இறைவியை வழிபடும் புனிதத் தலமாகும் மேலும் அன்னையின் மூன்று முதன்மை வடிவங்களிலும் அதாவது வன துர்கை, பத்ரகாளி மற்றும் ஜல துர்கை உருவங்களில் அன்னை காட்சி அளிக்கிறாள் மற்றும் போற்றப்படுகிறாள். வயநாட்டிலுள்ள பழங்குடி மக்கள் வணங்கும் மிகவும் முக்கியத்துவம் கொண்ட கோவிலாக இந்தக் கோவில் திகழ்கிறது.

Valliyoorkkavu Temple2016

திருவிழா

தொகு

ஆண்டு தோறும் பதினைந்து நாட்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படும் உற்சவம் இந்த மாநிலத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். ஒரு காலத்தில் இந்தத் திருவிழாவின் பொழுது, அடிமைகளை வாங்கி விற்கும் வணிகம் நடைபெற்று வந்தது. வயநாட்டில் இன்றும் இத்திருவிழாவின் பொழுது பழங்குடி மக்கள் மிகவும் அதிக அளவில் உற்சாகமாகப் பங்கேற்று வருகின்றனர். இந்தக் கோவில் கொய்லேறி என்றறியப்பட்ட இடத்திற்கு மிகவும் அருகாமையிலுள்ளது. பூச்சாளிக்கலத்தில் என்று பெயர் பெற்ற குடும்பம் இந்த அழகான கிராமத்தில் வசிக்கின்றனர். இவர்கள் வீட்டிற்கு முனனால் வெமொம் நெல் வயல் காணப்படுகிறது.

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளியூர்க்காவு&oldid=3821493" இலிருந்து மீள்விக்கப்பட்டது