மானந்தவாடி

இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு நகரம்

மானந்தவாடி(ஆங்கிலம்: Mananthavady) நகரம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமப் பஞ்சாயத்து ஆகும். இந்த நகரானது கபினி ஆற்றின் துணை ஆறான மானந்தவாடிப் புழையின் கரையில் அமைந்துள்ளது. இந்நகர் ஹோஸன்காடி எனவும் வழங்கப்பட்டதாக வரடூரில் அமைந்துள்ள அனந்தநாதசாமிக் கோயிலின் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மானந்தவாடி எனும் சொல் மான் எய்த வாடி எனும் சொல்லிலிருந்து வந்ததாகும்.[1] இந்தப் பகுதியானது பழசி இராசா எனும் அரசரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதி ஆகும். இது ஆங்கிலேயர் காலத்தில் முக்கிய இராணுவக் கேந்திரமாக இருந்துள்ளது. பழசிராசாவின் மண்டபம் ஒன்று இந்நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள ஒரே மருத்துவமனைதான் இப்பகுதியில் வாழும் அனைத்து பழங்குடியினருக்கும் மருத்துவ சேவையை வழங்குகிறது. வயநாடு மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகராக இந்நகரம் விளங்குகிறது.

மானந்தவாடி
മാനന്തവാടി
நகரம்
பழசி இராசா நினைவு மண்டபம்
பழசி இராசா நினைவு மண்டபம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்வயநாடு
ஏற்றம்760 m (2,490 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்37,836
 • அடர்த்தி472/km2 (1,220/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமலையாளம் மற்றும் ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்670645
கல்வியறிவு85.77%

அரசியல் தொகு

இது மானந்தவாடி சட்டமன்றத் தொகுதிக்கும், வயநாடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-13. பார்க்கப்பட்ட நாள் 2014-04-26.
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mananthavady
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மானந்தவாடி&oldid=3825780" இலிருந்து மீள்விக்கப்பட்டது