பட்டமளிப்பு
பட்டமளிப்பு (Graduation) என்பது ஒரு கல்வி நிறுவனத்தால் ஒரு மாணவருக்கு பட்டயம் வழங்குவதாகும். இது அதனுடன் தொடர்புடைய விழாவையும் குறிக்கலாம். பட்டமளிப்பு விழாவின் தேதி பெரும்பாலும் பட்டமளிப்பு நாள் என்று அழைக்கப்படுகிறது. இது சில நேரங்களில்: தொடக்கம், சபை, பட்டமளிப்பு அல்லது அழைப்பு என அழைக்கப்படுகிறது.
வரலாறு
தொகுபட்டம் பெறும் மாணவர்களுக்கான விழாக்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் முதல் பல்கலைக்கழகங்களில் இருந்து தொடங்குகின்றன. அப்போது இலத்தீன், அறிஞர்களின் மொழியாக இருந்தது. முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் பாடம் நடத்துவற்குரிய தகுதியுடையவர்களாக கருதப்பட்டனர்."பட்டம்" மற்றும் "பட்டதாரி" என்பது gradus எனும் இலத்தீன் சொல்லில் இருந்து வருகிறது, "படி" என்பது இதன் பொருளாகும். முதல் படியாக இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கப்பட்டது. இரண்டாம் படி முதுநிலைப் படி ஆகும், பட்டதாரிகளுக்கு கற்பிப்பதற்கான உரிமமாக இது கருதப்பட்டது. பட்டப்படிப்புக்கான பொதுவான ஆடையாக மேலங்கி மற்றும் முக்காடு அல்லது தொப்பிகள் ஆகியவை கருதப்பட்டது, இது இடைக்கால மதகுருமார்கள் அணியும் உடையை அடிப்படையாகக் கொண்டது.[1]
விழா
தொகுபொதுவாக பட்டமளிப்பு விழா என்பது பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு பொருந்தும். ( இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள்).
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், தலைமை அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர் தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ பட்டப்படிப்புகளை முறையாக வழங்குகிறார்.சில சமயங்களில் நேரடியாகவோ அல்லது அஞ்சலிலோ மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெறுகின்றனர்.
சான்றுகள்
தொகு- ↑ "Graduation through the ages". Archived from the original on 25 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 December 2018.
வெளி இணைப்புகள்
தொகு- ஈதன் ட்ரெக்ஸ், மென்டல் ஃப்ளோஸ் எழுதிய பட்டப்படிப்பு மரபுகளுக்குப் பின்னால் உள்ள கதைகள்