பட்டயம்
பட்டயம் (ஆங்கிலம்: diploma) என்பது கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட துறையில் கற்றுத் தேர்ச்சி பெற்றதற்கு வழங்கப்படும் சான்றிதழாகும். இந்தப் பட்டயமானது உயர் கல்வி, இளநிலைப் படிப்பு, முதுநிலைப் படிப்பு போன்ற வெவ்வேறு படிப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. வரலாற்றுப்படி டிப்ளமா என்ற பட்டயம் என்பது ஒரு அலுவல் ஆவணத்தைக் குறிக்கிறது.[1] டிப்ளமெடிக், டிப்ளமெட், டிப்ளமெசி போன்ற சொற்கள் இதன் இனச்சொற்களே.[2][3][4]
இலத்தீன் மொழியில் டிப்ளமா என்ற சொல்லானது சான்றளித்தல் அல்லது சான்றுகூறுதல் என்ற பொருளில் வருவதால் ஒரு தேர்ச்சியடைதல் என்பதற்குச் சான்றாக அளிக்கப்பட்ட ஆவணத்தை டிப்ளமா என்று அழைக்கும் வழக்கம் வந்தது.[5] பட்டப்படிப்பிற்கான சான்றிதழாகவும் இந்த ஆவணம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குறிக்கிறது.[6][7][8][9] நோபல் பரிசு பெற்றொருக்கு வழங்கப்படும் சான்றிதழையும் பட்டயம் என்றே அழைக்கின்றனர். வரலாற்று மூலங்களின்படி மன்னர் தானமாகவோ குத்தகைக்கு வழங்கிய நிலப்பட்டாவை பட்டயம் என்றே குறிக்கப்படுகிறது.
பயன்பாடுகள்
தொகுஆஸ்திரேலியா
தொகுஆஸ்திரேலியாவில், மூன்று வகையான பட்டயப் படிப்புகளை ஆஸ்திரேலிய தகுதிக் கட்டமைப்பு அமைப்பு அங்கீகரித்துள்ளது. ஆஸ்திரேலிய தகுதிக் கட்டமைப்பு வழங்கும் முதல்வகைப் பட்டயம் என்பது 12 முதல் 18 மாதம் முழு நேரப் படிப்பிற்கு வழங்கப்படுகிறது இது முதலாண்டு இளநிலைப் பட்டப்படிப்பிற்கு இணையானதாகும். மேல்நிலை பட்டயம் என்ற இரண்டாவது வகை என்பது ஆஸ்திரேலிய நாட்டு துணைப் பட்டப் படிப்பிற்கு இணையானதாகும். பட்டதாரிப் பட்டயம் என்ற மூன்றாம் வகையானது ஒரு பட்டப்படிப்பை முடித்த பின்னர் கற்றுக் கொள்ளும் பயிற்சியாகும். ஆசிரியர் பணியிடங்களுக்கு இவ்வகை பட்டயம் தேவைப்படுகிறது.[1] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
கனடா
தொகுகனடாவில் மாகாணங்களுக்கு ஏற்பவும் கல்லூரி பல்கலைக்கழகத்திற்கு ஏற்பவும் பட்டயப் படிப்பு மாறுகிறது. கலை மற்றும் தொழினுட்பம் கற்பிக்கும் கல்லூரிகளில் பட்டயப்படிப்பும், பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.
ஜெர்மனி
தொகுஜெர்மனி நாட்டு கல்விமுறையைப் பின்பற்றும் ஜெர்மனி, யுக்ரேன், செர்பியா மற்றும் குரோவாசியா நாடுகளில் இளநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டம் போல தகுதரம் நிறைந்த 3.5 ஆண்டு படிப்பாகவே உள்ளது.
இந்தியா
தொகுஇந்தியாவில் முறைசார் கல்வித்துறை மற்றும் முறைசாரா கல்வித்துறை என இருவகையான பட்டயப் படிப்புகள் உள்ளன. முறைசார் கல்வித்துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டயத்தைப் பெறலாம். முறைசாரா கல்வித்துறையில் தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற அமைப்பு போன்ற மாற்று கல்வி நிலையங்களின் மூலம் பயிற்சி பெற்று பட்டயத்தைப் பெறலாம்.
பட்டயப்படிப்பு என்பது பத்தாவது மேல்நிலைக் கல்வி முடித்தவுடன் சேர்ந்துகொள்ளமுடியும். இயந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல், மின்னணுப் பொறியியல், தகவல்தொடர்புப் பொறியியல், கடல்சார் பொறியியல் போன்ற தொழிற்கல்விப் பிரிவுகளிலும் சமையற்கலை, விடுதிநிர்வாகம் போன்ற பல்வேறு பட்டயப்படிப்புகள் மூன்றாண்டு பயிற்சியாக உள்ளன. பட்டயப்படிப்பு முடித்து, பொறியியல் கல்வியில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து கொள்ளலாம்.[10]
பாக்கிஸ்தான்
தொகுபாக்கித்தான் நாட்டில் பொதுவாகத் தொழிற்படிப்புகளான பொறியியல், செவிலிப் பணி, மின்னணுப் பொறியியல், மின்பொறியியல் மற்றும் குடிசார் பொறியியல் போன்றவற்றிற்கு பட்டயப் படிப்பு வழங்கப்படுகிறது. பட்டயம் பெற்றவர்கள் துணைப் பொறியாளர் என்ற நிலையில் பார்க்கப்படுவார்கள். முதுநிலை பட்டயப்படிப்பு என்பது இளநிலைப் பட்டத்திற்கு இணையானதாகும்.
அமெரிக்கா
தொகுஅமெரிக்காவில் பொதுவாகப் பட்டயச் சான்றிதழ் என்பது உயர்நிலைப் பள்ளியோ அல்லது பட்டப்படிப்போ முடித்த பிறகு வழங்கப்படுகிறது. சிலவேளைகளில் வேறுநாட்டுக் கல்விநிலையங்களில் சேரும் இந்நாட்டு மாணவர்களுக்கு குழப்பம் நிலவலாம்.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Diploma". Oxford Living Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். Archived from the original on 7 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Diplomatic". Oxford Living Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். Archived from the original on 7 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Diplomat". Oxford Living Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். Archived from the original on 7 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Diplomacy". Oxford Living Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். Archived from the original on 7 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Testamur". Collins Dictionary. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "Testamur (degree certificates)". மொனாஷ் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "My Graduation Certificate". மெல்பேர்ண் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "Testamur (certificate)". வல்லன்கொங் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "Parchment". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "Degree VS Diploma". டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2018.