பட்டறிவுச் சான்று

பட்டறிவுச் சான்று (Empirical evidence) அல்லது புலன் அனுபவம் என்பது, புலன் வழியாக, குறிப்பாக, கவனிப்பு, பரிசோதனை என்பவற்றுனூடாகக் கிடைக்கும் அறிவைக் குறிக்கும்.[1]

பொருள் தொகு

பட்டறிவுச் சான்று, ஒரு விடயத்தின் உண்மை அல்லது பொய்த் தன்மையைச் சரிபார்க்க உதவும் தகவல் ஆகும். பட்டறிவுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே அறிவைக் கொண்டிருப்பதாகக் கருதமுடியும் என்பது பட்டறிவுவாதிகளின் கருத்து அல்ல. பட்டறிவுவாதிகளின் கருத்துப்படி, பரிசோதித்துப் பார்க்கத்தக்க சரிபார்க்கத்தக்க தகவல்கள் மட்டுமே அறிவைப் பெறுவதற்கான வழி அல்ல. பட்டறிவுச் சான்று கவனிப்பின் மூலமும், பரிசோதனை மூலமும் பெறப்படும் தகவல். இது அறிவியலாளர்களால் பதிவு செய்யப்பட்டுப் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதுவே பட்டறிவுச் சான்றின் முதன்மை மூலம். முதன்மை மூலங்கள் தொடர்பில் விளக்குதல், உரையாடல், விரித்துரைத்தல், கருத்துக் கூறுதல், பகுப்பாய்தல், மதிப்பிடல், சுருக்குதல் போன்றவற்றினால் கிடைப்பவை துணை மூலங்கள். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவரும் கட்டுரைகள், நூல்கள், திரைப்படத் திறனாய்வுகள், வேறு ஆய்வுகளை மதிப்பிடும் அல்லது மீளாய்வு செய்யும் புலமைசார் ஆய்விதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் துணை மூலங்களாக அமையும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Pickett 2006, ப. 585
  2. Feldman 2001, ப. 293
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டறிவுச்_சான்று&oldid=2466637" இலிருந்து மீள்விக்கப்பட்டது