பட்டினை உற்பத்திச் செய்யும் விலங்குகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பட்டு பல்வேறு வகையான விலங்குகளால், பல்வேறு நோக்கங்களுக்காக, பல்வேறு வகைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குப் பட்டினை உற்பத்தி செய்யும் விலங்குகளின் பட்டியல் (List of animals that produce silk) கொடுக்கப்பட்டுள்ளது.

பூச்சிகள்

தொகு
  • முதிர்வடைந்த உருமாற்றத்திற்கு இளம் உயிரிகள் உட்படுத்தும்போது பட்டுப்புழு பட்டினை உற்பத்தி செய்கின்ற. இதில் வளர்க்கப்படும் பாம்பிக்ஸ் மோரி தவிரப் பல அந்துப்பூச்சி இனங்களும் அடங்கும். இவை வணிக ரீதியாகப் பட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.[1]
  • ராஸ்பி கிரிகெட்டுகள் கூடுகளை உருவாக்கப் பட்டு உற்பத்தி செய்கின்றன.
  • தேனீ மற்றும் வண்டுத்தேனீ இளம் உயிரிகள் மெழுகு செல்களை வலுப்படுத்தப் பட்டு உற்பத்தி செய்கின்றன. [2]
  • புல்டாக் எறும்புகள் கூட்டுப்புழு பருவத்தில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் பட்டினை உற்பத்தி செய்கின்றன.
  • நெசவாளர் எறும்புகள் பட்டுப் பயன்படுத்தி இலைகளை ஒன்றாக இணைத்து கூடுகளை உருவாக்குகின்றன.
  • வலைபின்னர்களின் முன் கால்களில் பட்டு சுரப்பிகள் உள்ளன.
  • ஹார்னெட்டுகள்
  • வெள்ளிமீன் (பூச்சி)
  • மேஃப்பிளை
  • இலைப்பேன்
  • இலைவெட்டிகள் பிற விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கத் தாம் வசிக்கும் மரங்களில் இலைகளின் கீழ்ப் பட்டு கூடுகளைத் தயாரிக்கின்றன.[3]
  • வண்டுகள்
  • லேஸ்விங்ஸ்
  • தெள்ளு
  • இருசிறகிப் பூச்சிகள்
  • மிட்ஜஸ்
  • பல பட்டாம்பூச்சி இனங்களின் கம்பளிப்பூச்சிகள் தங்குமிடங்களை உருவாக்கப் பட்டினைப் பயன்படுத்துகின்றன அல்லது கூட்டுப்புழு நிலையில் அடி மூலக்கூறுகளுடன் இணைக்கின்றன.[4]
  • பிராக்கோனிட்கள் போன்ற ஒட்டுண்ணி குளவிகள் பட்டினை கூட்டுப்புழு நிலையில் பயன்படுத்துகின்றன.[5]

பிற விலங்குகள்

தொகு
  • டிப்ளூரா வரிசையில் உள்ள புரோஜாபிகிடே குடும்பத்தில் பட்டு சுரப்பிகள் அடங்கிய செர்சி உள்ளது.[6]
  • மட்டியில் பின்னா நோபிலிசு தன்னை பாறையில் நிலைநிறுத்திப் பிணைக்கப் பட்டினை உருவாக்குகிறது. இதிலிருந்து கடல் பட்டுத் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • சிலந்திகள் தங்கள் வலைகளை அமைக்க, முட்டைகளைப் பாதுகாக்க அல்லது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகச் சிலந்தி பட்டினைத் தயாரிக்கின்றன.
  • தலை ஓடுகாலிகள் பெரம்பிதோ ஃபெமோராட்டா கெல்ப் தகடுகளிலிருந்து கூடு தயாரிக்க பட்டினைப் பயன்படுத்துகிறது.
  • கெண்டை மீன் முட்டைகளைப் பாறைகளுடன் இணைக்கப் பட்டின் ஒரு அங்கமான ஃபைப்ரோயின் புரதத்தினை உற்பத்தி செய்கிறது.[7]
  • சிலந்திப் பூச்சிகள் வேட்டையாடுபவர்களுக்கு எதிராகப் பாதுகாக்கும் வலைகளை உருவாக்குகின்றன.
  • சூடோஸ்கார்பியன்கள் பட்டு அறைகளை உருவாக்குகின்றன. இதில் இவை தோலுரிக்கின்றன.
  • பிரித்தெடுக்கக்கூடிய பட்டு புரதங்களைக் கொண்ட பாலை உற்பத்தி செய்ய ஆடுகள் மரபணு மாற்றப்பட்டுள்ளன.[8]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.wormspit.com
  2. "Bees Are The New Silkworms". ScienceDaily. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
  3. Gurr, Geoff M.; Fletcher, Murray J. (2011). "Silk production by the Australian endemic leafhopper Kahaono montana Evans (Cicadellidae: Typhlocybinae: Dikraneurini) provides protection from predators". Australian Journal of Entomology: no. doi:10.1111/j.1440-6055.2011.00813.x. 
  4. https://bugguide.net/node/view/202368
  5. "Tobacco Hornworm (parasitoid and hyperparasite) - BugGuide.Net".
  6. Diplura
  7. "Silk production and use in arthropods". Map of Life. Archived from the original on 2015-03-20. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
  8. Elices, M.; Guinea, G. V.; Plaza, G. R.; Karatzas, C.; Riekel, C.; Agulló-Rueda, F.; Daza, R.; Pérez-Rigueiro, J. (2011). "Bioinspired Fibers Follow the Track of Natural Spider Silk". Macromolecules 44 (5): 1166–1176. doi:10.1021/ma102291m. Bibcode: 2011MaMol..44.1166E.