பட்டைக்கூம்பு

(பட்டைக் கூம்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடிவவியலில் பட்டைக்கூம்பு (இலங்கை வழக்கு: கூம்பகம்) (pyramid) என்பது, அதன் அடி தவிர்ந்த எல்லா முகங்களும் முக்கோண வடிவில் அமைந்ததும், அவற்றின் உச்சிகள் அனைத்தும் ஒரே புள்ளியில் ஒன்று சேர்வதுமான ஏதாவதொரு முப்பரிமாணப் பன்முகி (polyhedron) ஆகும். ஒரு பட்டைக்கூம்பின் அடி ஏதவதொரு பல்கோணமாக இருக்கலாம், ஆனாலும், பொதுவாக நாற்கோண வடிவான அடியுடன் அமைந்த பன்முகிகளே பட்டைக்கூம்புகள் எனப்படுகின்றன. இதன் அடி ஒரு ஒழுங்கான பல்கோணியாகவும், ஏனைய முகங்கள் சர்வசமனான சமபக்க முக்கோணிகளாகவும் இருப்பின் அது ஒழுங்கான பட்டைக்கூம்பு எனப்படும்.

ஒரு சதுரப் பட்டைக்கூம்பு

பட்டைக்கூம்பின் அடிக்கு இணையான ஒரு தளத்தினால் அதன் மேற்பகுதியை வெட்டி எடுத்தால் மிஞ்சும் பகுதி அடிக்கண்டம் என அழைக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டைக்கூம்பு&oldid=3309787" இலிருந்து மீள்விக்கப்பட்டது