பட்டோடி நவாப்

பட்டோடியின் நவாப் (Nawab of Pataudi) என்பது முந்தைய பட்டோடி சமஸ்தானத்து அரசர்களைக் குறிக்கும் பட்டம். இப்பகுதி இன்றைய அரியானா மாநிலத்தில் உள்ளது. 1971 ஆம் ஆண்டில் 26 ஆவது சட்டதிருத்தம் மூலம் அரசர்களின் உரிமை ஒழிக்கப்பட்ட பின்னர் நவாப் பட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது.

பட்டோடி சமஸ்தானத்தின் எட்டாவது நவாப் இப்திக்கார் அலி கான் பட்டோடி விடுதலைக்கு முற்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைவர். இவரது மகனும் ஒன்பதாவது நவாபுமான மன்சூர் அலிகான் பட்டோடி விடுதலை பெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைவர். மன்சூர் அலிகான் பட்டோடியின் மகனான நடிகர் சாயிஃப் அலி கான் 2011 ஆம் ஆண்டு பத்தவாது நவாபாகப் பட்டமேற்றுள்ளார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டோடி_நவாப்&oldid=2712231" இலிருந்து மீள்விக்கப்பட்டது