பண்டாரம்பட்டி

பண்டாரம்பட்டி என்ற கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இது 2000 மக்கள்தொகை கொண்டது. ஆரம்ப நாட்களில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தது, ஆனால்   தொழில்மயமாக்கல் காரணமாக இங்குள்ள மக்கள் தூத்துக்குடி துறைமுகத்திலும், பிற தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர்.

Pandarampatti
Rithammalpuram
village
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Thoothukudi
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

பண்டாரம்பட்டி தொடக்கப்பள்ளிதொகு

ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளி. சுமார் 105 ஆண்டுகளுக்கு மேலான இப்பள்ளி மிகப் பழமையான கட்டிடத்தில் 2020 ஆண்டு வரை இயங்கி வந்தது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் செ.நெல்சன் பொன்ராஜ் அவர்களின் சீரிய முயற்சியினால் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு மிக நேர்த்தியாக ஸ்மாரட் வகுப்பறை வசதியுடன் திறம்பட கட்டப்பட்டுள்ளது. பள்ளியின் உட்புறத் தோற்றம் மாணவர்களை மட்டுமல்ல பள்ளிக்கு யார் சென்றாலும் இப்பள்ளியில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக உள்ளது. பள்ளியின் வெளிப்புறத்தில் உட்புறத்திலும் கண்கவர் பசுமையான செடிகள். இன்று இப்பள்ளி பண்டாரம்பட்டி கிராமத்தின் மையத்தில் கம்பீரமாக காட்சி தருகிறது.

நிலவியல்தொகு

பண்டாரம்பட்டி தூத்துக்குடி நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ளது.  இது வங்காள விரிகுடாவில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

பொதுவான வேளாண் பயிர்கள்தொகு

சோளம்
தக்காளி
மிளகாய்
கொடை மிளகாய்
உளுந்து 
பாசிப்பயிறு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டாரம்பட்டி&oldid=3430608" இருந்து மீள்விக்கப்பட்டது